- Advertisement -
Homeபொழுதுபோக்குஇது உருட்டல்ல… நிஜம்தான், வாடிவாசல் படத்துக்கு வித்யாசமாக கால்ஷீட் கொடுத்த நடிகர் சூர்யா -...

இது உருட்டல்ல… நிஜம்தான், வாடிவாசல் படத்துக்கு வித்யாசமாக கால்ஷீட் கொடுத்த நடிகர் சூர்யா – அட இது புதுசா இருக்கே என வாய் பிளந்த ரசிகர்கள்!

- Advertisement -

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் வாடிவாசல் என்ற படத்தை உருவாக்குவது என 5 ஆண்டுகளுக்கு முன்பே முடிவானது. இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கவும் முன்வந்தார். இதற்காக பல மாதங்களாக ஜல்லிக்கட்டு காளை ஒன்றையும் நடிகர் சூர்யா பராமரித்து அந்த காளையுடன் ஜல்லிக்கட்டு சார்ந்த பயிற்சிகளும் எடுத்து வந்தார்.

மேலும் இந்த படத்தில் மிக முக்கியமான ஒரு கேரக்டரில் இயக்குனர் அமீர் நடிக்கவும் கமிட் ஆகியிருந்தார். ஆனால் சில காரணங்களால் வாடிவாசல் படப்பிடிப்பு தள்ளிப் போனது. மாதக்கணக்கில் ஆண்டுகணக்கில் என 5 ஆண்டுகளாக இந்த படம் உருவாகவில்லை. கலைப்புலி தாணு சூர்யா, வெற்றிமாறனுக்கு பெரிய அட்வான்ஸ் தொகை கொடுத்தது மட்டுமின்றி ப்ரீ புரடக்சன்ஸ் பணிக்காக பல கோடி ரூபாய் செலவும் செய்திருந்தார்.

- Advertisement -

விடுதலை 2 படத்துக்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறனும், கங்குவா படத்துக்கு பிறகு நடிகர் சூர்யாவுக்கும் வாடிவாசல் படத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் கால்ஷீட் விவகாரத்தில் சூர்யா வெற்றிமாறன் இடையே பிரச்னை ஏற்பட்டது. நான் கதையை படித்து பார்க்க பவுண்டர் ஸ்கிரிப்ட் கொடுக்க வேண்டும்.

இந்த படத்தை 2ம் பாகமாக எடுக்க கூடாது. அதே போல் இந்த படத்தின் ஷூட்டிங் எப்போது ஆரம்பித்து எப்போதும் முடியும் என்பதற்கான எழுத்துபூர்வ ஒப்புதல் எனக்கு வேண்டும் என்று நடிகர் சூர்யா போட்ட கண்டிஷன்களால் வெற்றிமாறன் பயங்கர அப்செட் ஆனார். அதனால் இந்த படம் பண்ண முடியாது என்று அவர் கூறிவிட இருவரும் பிரிந்து விட்டனர். தாணுவிடம் வாங்கிய அட்வான்ஸ்க்காக தான் சிம்பு நடிப்பில் அரசன் படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார்.

- Advertisement -

அதே போல் சூர்யாவும் தாணு தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கிடையே இப்போது வந்த லேட்டஸ்ட் தகவலின் படி வாடிவாசல் படத்தை இயக்க வெற்றிமாறன் முன்வந்த நிலையில் அந்த படத்தில் நடிக்க நடிகர் சூர்யாவும் ஓகே சொல்லியிருக்கிறார். ஆனால் ஆண்டுக்கணக்கில் ஷூட்டிங்கை இழுக்கும் வெற்றிமாறனிடம் வசமாக சிக்கி விடக்கூடாது என்பதற்காக ஒரு புதிய யுக்தியை சூர்யா கையாண்டுள்ளார்.

அதாவது மாதம் 10 நாட்கள் வீதம் 130 நாட்கள் என்னுடைய கால்ஷீட் தருகிறேன். அதாவது 13 மாதங்களுக்கு 130 நாட்கள் என என்னை பயன்படுத்தி கொள்ளலாம் என்று வெற்றிமாறனுக்கு சூர்யா பச்சைக்கொடி காட்டியிருக்கிறார்.இதற்கு வெற்றிமாறனும் ஓகே சொன்ன நிலையில் மிக விரைவில் வாடிவாசல் குறித்த முக்கிய அறிவிப்பை தயாரிப்பாளர் தாணு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்