தமிழக சட்டசபை தேர்தல் நெருங்க நெருங்க தவெக தலைவர் நடிகர் விஜய் – சங்கீதா விவகாரம் இன்னும் மிகப்பெரிய அளவில் விஸ்வரூபம் எடுக்கும் என்று தெரிகிறது. ஒரு அரசியல் இயக்கத்தின் தலைவராக உள்ள விஜய் தனிமனித ஒழுக்கத்தில் சிறந்தவராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்த நிலையில் அந்த எண்ணத்தை அவர் தவிடுபொடியாக்கி விட்டார்.
நடிகர் விஜய்க்கும் நடிகை திரிஷாவுக்கும் உள்ள நெருக்கமான நட்பு இப்போது வெளிச்சத்துக்கு வந்துவிட்ட நிலையில் தமிழ்நாட்டு மக்களிடையே கடும் அதிருப்தியை விரக்தியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக விஜய் ரசிகர்களுக்கும் தவெக கட்சி சார்ந்தவர்களுக்கும் இது பலத்த அதிர்ச்சியை கவலையை தந்துள்ளது.
அதனால் விஜய் குறித்து அவரது மனைவி சங்கீதா கூறும் குற்றச்சாட்டுகள் இன்னும் பெரிய அளவில் மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறி வருகிறது. அதனால் நடிகர் விஜயின் மனைவி சங்கீதா மிக விரைவில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்த உள்ளதாக ஒரு முக்கியமான தகவல் இப்போது வெளியாகி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த திரைப்பட தயாரிப்பாளர் இல்ல திருமண வரவேற்பு விழாவில் நடிகை திரிஷாவுடன் ஜோடியாக நடிகர் விஜய் பங்கேற்றது தமிழக மக்களுக்கு பலத்த அதிர்ச்சியை தந்தது. விஜயின் இந்த வரம்பு மீறிய செயலால் அவரது மனைவி சங்கீதா கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. அதனால் சங்கீதா மிக விரைவில் செய்தியாளர்களை நேரில் சந்தித்து தனக்கும் விஜய்க்கும் இடையிலான பிரச்சனைகளை பொதுவெளியில் பேச உள்ளார்.
நடிகர் விஜய்க்கு அவரது மனைவி சங்கீதா மூலம் ஏற்படும் இந்த குடும்ப விவகார பிரச்சினைகளால் கண்டிப்பாக சட்டசபை தேர்தலில் விஜய்க்கும் அவரது தவெக கட்சிக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. செய்தியாளர்களை சந்திக்கும் சங்கீதா, விஜய் குறித்து வைக்கும் கடுமையான விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் நிச்சயமாக அரசியல் களத்தில் விஜய் மீதான அபிமானத்தை அபிப்ராயத்தை மக்கள் மத்தியில் சீர்குலைக்க செய்யும்.
அவர் மீதான நல்ல பார்வையை வேறுபடுத்தும். இது தேர்தலில் தவெக கட்சிக்கு பெரிய பாதிப்பை தரவும் அதிக வாய்ப்புள்ளது. நடிகர் விஜய் கட்சி துவங்கி 2 ஆண்டுகள் கடந்தும் இன்னும் பிரஸ்மீட் வைக்காமல் செய்தியாளர்களை சந்திக்காமல் தவிர்த்து வருகிறார். பிரஸ்மீட் என்றாலே விஜய்க்கு அலர்ஜியாக உள்ளது. ஆனால் அவருக்கு அலர்ஜியான விஷயத்தை சங்கீதா கையில் எடுத்து ஆப்பு வைக்க தயாராகி விட்டார். இதில் முக்கியமான புகைப்படங்கள் வீடியோ ஆதாரங்களை சங்கீதா வெளியிடவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.





