- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகன் படம் ரிலீஸ் தேதியில் நீடிக்கும் மர்மம்… இன்னும் 3 மாதங்கள் ஆகுமா? - ஓடிடி...

ஜனநாயகன் படம் ரிலீஸ் தேதியில் நீடிக்கும் மர்மம்… இன்னும் 3 மாதங்கள் ஆகுமா? – ஓடிடி உரிமம் குறித்து வெளியான அதிரடியான தகவல்!

- Advertisement -

இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் பூஜா ஹெக்டே மமீதா பைஜூ பாபி தியோல் கௌதம் மேனன் பிரகாஷ்ராஜ் நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ஜனநாயகன். இந்த படம் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு இருந்தது. படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் குறிப்பிட்ட தேதியில் படம் ரிலீஸ் ஆகாமல் ரிலீஸ் தேதி தள்ளி போனது.

இப்போது வரை ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை. அதனால் படம் எப்போதும் வெளியாகும் என்பது யாருக்கும் தெரியாமல் உள்ளது. படம் ரிலீஸ் தேதி அறிவித்து 2 மாதங்கள் கடந்து போய்விட்டது. இதனால் இதனால் ஜனநாயகன் படத்தை தியேட்டர் விநியோகம் செய்ய அதிக விலை கொடுத்து வாங்கியவர்களும் ஓடிடி உரிமம் வாங்கிய அமேசான் பிரைம் ஓடிடி நிறுவனமும் இந்த படத்துக்காக போட்ட முதலீட்டுக்கு பலத்த இழப்பை சந்தித்து வருகின்றன.

- Advertisement -

ஜனநாயகன் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் தங்களது பணத்தை தயாரிப்பாளரிடம் திருப்பி கேட்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி உள்ளது. அதுபோல இந்த படத்தின் ஓடிடி உரிமையை 120 கோடி ரூபாய் கொடுத்து வாங்கிய அமேசான் பிரைம் ஓடிடி நிறுவனமும் அவர்களது ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே மொத்த பணத்தையும் ஓடிடி நிறுவனங்கள் தந்துவிடுகின்றன. ஆனால் ஜனநாயகன் படம் தற்போது வரை எப்போது திரைக்கு வரும் என்பதில் மர்மம் நீடித்து வருவதால் இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தமிழக சட்டசபை தேர்தல் முடியும் வரை ஜனநாயகன் படம் வெளியாக வாய்ப்பில்லை. ஏனென்றால் இன்னும் ரீவைசிங் கமிட்டி ஜனநாயகன் படத்தை பார்க்க கூட இல்லை.

- Advertisement -

அதனால் ஜனநாயகன் ரிலீஸ் தேதி என்பது இன்னும் கண்ணுக்குத் தெரியாத ஒரு மர்மமாக இருந்து வருகிறது. விரைவில் சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டால் ஜனநாயகன் படத்தை ரிலீஸ் செய்ய முடியாது. தேர்தல் நடந்து முடிந்த பிறகு தான் ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளது. அதற்கு இன்னும் 2 அல்லது 3 மாதங்கள் வரை ஆகலாம்.

அதுவரை ஓடிடி நிறுவனம் காத்திருக்க விரும்பாமல் ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிமத்தை ரத்து செய்துவிட்டு கொடுத்த ரூ. 120 கோடி தொகையை திருப்பிக் கேட்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இது தளபதி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த படத்தை தயாரித்துள்ள கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனமும் படம் ரிலீஸாகாத சூழலில் ஓடிடி நிறுவனம் எடுத்த முடிவால் பலத்த அதிர்ச்சியில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்