இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த 2023ம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற படம் ஜெயிலர். இந்த படத்தில் ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன் வசந்த் ரவி மலையாள நடிகர் விநாயகன் யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மேலும் கெஸ்ட் ரோலில் மோகன்லால் ஜாக்கி ஷெராப் சிவராஜ்குமார் போன்றவர்களும் நடித்திருந்தனர்.
ஜெயிலர் படத்தின் அபார வெற்றிக்குப் பிறகு ஜெயிலர் 2ம் பாகம் படம் உருவாகி வருகிறது. ஜெயிலர் முதல் பாகத்தில் நடித்த முக்கிய நடிகர் நடிகைகள் பலர் ஜெயிலர் 2 படத்திலும் நடித்துள்ளனர். அந்த வகையில் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்துடன் யோகி பாபுவும் காமெடி கேரக்டரில் நடித்திருந்தார்.
ரஜினிகாந்த் – யோகிபாபு கூட்டணியில் உருவான காமெடி காட்சிகள் ரசிக்கும் விதமாக படத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஜெயிலர் 2ம் பாகத்திலும் ரஜினி – யோகிபாபு காமெடி கூட்டணி இந்த முறையும் தியேட்டரில் ரசிகர்களிடையே பலத்த கலகலப்பை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் யோகி பாபு ஜெயிலர் 2 படத்தில் நடித்த போது கிடைத்த அனுபவங்களை ரசிகர்களுடன் பகிர்ந்திருக்கிறார். அப்போது நடிகர் யோகிபாபு கூறியதாவது, ஜெயிலர் முதல் பாகத்தை விட இந்த 2ம் பாகத்தில் எனது கேரக்டரை இயக்குனர் நெல்சன் வித்தியாசமாக வடிவமைத்துள்ளார்.
நிச்சயம் இந்த கேரக்டர் ரசிகர்களுக்கு மிகவும் உற்சாகத்தையும் சிரிப்பையும் வரவழைக்கும். இந்த படப்பிடிப்பின் போது ரஜினிகாந்த் என்னிடம் வந்து யோகி என்னை பாருங்கள். எல்லாம் சரியாக இருக்கிறதா? ஜெயிலர் படத்தில் இருந்தது போலவே என்னுடைய கெட்டப் சரியாக இருக்கிறதா என்று அடிக்கடி கேட்பார்.
இப்போது கூட அவர் ஏதோ முதல் படத்தில் நடிப்பது போன்று அவ்வளவு சின்சியராக தனது வேலையை செய்து வருகிறார் என்று நடிகர் யோகி பாபு அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். நடிகர் ரஜினிகாந்தை பொருத்த வரை இப்போதும் கூட அவர் நடிக்கும் படத்தை தனது முதல் படமாக நினைத்துதான் காமிரா முன்பு நடிக்கிறார் என்று யோகிபாபு போலவே ஏற்கனவே பல நடிகர்கள் பலரும் ரஜினியின் சின்சியாரிட்டி குறித்து கூறியிருக்கின்றனர்.





