- Advertisement -
Homeபொழுதுபோக்குஅய்யய்யோ இதை மிஸ் பண்ணிட்டோமே- விலை உயர்ந்த பரிசை தவறவிட்டு தவித்த நெல்சன், அடப்பாவமே

அய்யய்யோ இதை மிஸ் பண்ணிட்டோமே- விலை உயர்ந்த பரிசை தவறவிட்டு தவித்த நெல்சன், அடப்பாவமே

- Advertisement -

“ஜெயிலர்” திரைப்படத்தின் வெற்றி பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. கடந்த 10 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் வெளியாகி 8 நாட்களே முடிவடைந்துள்ள நிலையில் உலகளவில் பாக்ஸ் ஆஃபிஸில் சுமார் ரூ.400 கோடிகளுக்கும் மேல் வசூல் ஆகி வருகிறது.

கடந்த ஆண்டு வெளியான “விக்ரம்” திரைப்படத்தின் வசூலை “ஜெயிலர்” திரைப்படம் முறியடித்து உள்ளது. அதே போல் “பொன்னியின் செல்வன்” முதல் பாகத்தின் வசூலையும் விரைவில் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“ஜெயிலர்” திரைப்படம் தமிழ்நாட்டை தாண்டி ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இத்திரைப்படத்தில் அனைத்து மொழி ரசிகர்களையும் கவரும் விதமாக, மலையாளத்தில் இருந்து மோகன் லால், தெலுங்கில் இருந்து சுனில், கன்னடத்தில் இருந்து சிவராஜ்குமார், ஹிந்தியில் இருந்து ஜாக்கி செராஃப் போன்றோரை இத்திரைப்படத்தில் நடிக்க வைத்திருந்தார் நெல்சன்.

இதனிடையே “ஜெயிலர்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இயக்குனர் நெல்சன் நடிகர் ஜாக்கி செராஃப்-ஐ குறித்து பகிர்ந்துகொண்ட ஒரு கலகலப்பான தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அதாவது ஜாக்கி செராஃபிடம் “ஜெயிலர்” படத்தின் கதையை கூறுவதற்கு அவரை பார்க்க மும்பைக்குச் சென்றிருந்தாராம். அங்கே நீச்சல் குளத்தில் ஜாக்கி செராஃப் குளித்துக்கொண்டிருந்தாராம். நெல்சனை பார்த்ததும் நீச்சல் குளத்தில் இருந்து எழுந்து வந்தாராம்.

நெல்சனுக்கு அவரிடம் கதையை கூறுவதற்கே பயமாக இருந்ததாம். அதன் பின் ஒரு வழியாக கதையை கூறத் தொடங்கும்போது, “ரஜினி சார் படம்தானே, கதை எல்லாம் வேண்டாம், நான் நடிக்கிறேன்” என கூறிவிட்டாராம்.

அதன் பின் ஜாக்கி செராஃப் நெல்சனை அழைத்துக்கொண்டு தனது பண்ணை வீட்டை சுற்றிக்காட்டினாராம். அப்போது அங்கு ஒரு ஸ்கூட்டர் நின்றுகொண்டிருந்ததாம். அதனை பார்த்த நெல்சன், “இந்த ஸ்கூட்டரை நான் ஒரு காலத்துல வச்சிருந்தேன். நான் முதன்முதலில் இந்த ஸ்கூட்டரைத்தான் ஓட்டிக்கொண்டிருந்தேன்” என்று கூறினாராம். அப்போது ஜாக்கி செராஃப் எதுவும் பேசவில்லையாம்.

அதன் பின் நெல்சன் சென்னைக்கு வருவதற்கு முன்பே அந்த ஸ்கூட்டர் அவரது அலுவலகத்திற்கு வந்துவிட்டதாம். “ஆஹா, இது தெரிந்திருந்தால் அங்கு ஒரு லெக்சஸ் கார் நின்றிருந்ததே, அதை சொல்லிருப்பேனே” என்று நினைத்தாராம்.

சற்று முன்