- Advertisement -
Homeபொழுதுபோக்குஇதுவரை இருந்த அந்த ஒரு குறை என்னால் கலைந்தது - ஞானபீடம் விருது பெறும் கவிஞர்...

இதுவரை இருந்த அந்த ஒரு குறை என்னால் கலைந்தது – ஞானபீடம் விருது பெறும் கவிஞர் வைரமுத்து வெளியிட்ட பதிவில் நெகிழ்ச்சி!

- Advertisement -

இந்தியாவில் இலக்கியத்தில் மிக உயர்ந்த விருதாக ஞானபீடம் விருது வழங்கப்படுகிறது. எழுத்தாளர்கள் தங்கள் வாழ்நாளில் இலக்கியத்துக்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பை அங்கீகரித்து அவர்களை பாராட்டும் விதமாக இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 1962ம் ஆண்டு முதல் ஞானபீடம் விருது வழங்கப்பட்டு வருகிறது.

நாட்டின் மிகப் பழமையான இலக்கிய விருதுகளில் இது ஒன்றாகவும் உள்ளது. பாரதிய ஞான பீடம் அறக்கட்டளை இந்த விருதுகளை வழங்குகிறது. அரசியல் அமைப்பு சட்டத்தின் 8வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளுக்கும் இந்த விருது வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தமிழில் எழுத்தாளர் அகிலன் எழுதிய சித்திரப்பாவை படைப்புக்கு 1975ம் ஆண்டில் ஞானபீட விருது வழங்கப்பட்டது.

- Advertisement -

அதன்பிறகு 27 ஆண்டுகளுக்கு பிறகு 2002ம் ஆண்டு எழுத்தாளர் ஜெயகாந்தனின் இலக்கிய பணிகளை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு ஞானபீடம் விருது வழங்கப்பட்டது. தமிழில் எண்ணற்ற ழுத்தாளர்கள் இருந்தும் 1965ம் ஆண்டு முதல் இதுவரை 2 தமிழ் எழுத்தாளர்கள் மட்டுமே ஞானபீடம் விருதை பெற்றிருந்தனர்.இந்நிலையில் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் நாட்டின் உயரிய விருதான ஞானபீடம் விருது பெறும் 3வது தமிழர் என்ற பெருமையை வைரமுத்து பெறுகிறார். ஞானபீடம் விருது குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, ஞானபீட விருது இலக்கியத்திற்குப் பெரிதினும் பெரிது; தமிழுக்கு அரிதினும் அரிது. இந்திய இலக்கியத்தின் நோபல் பரிசு என்று அறிவுலத்தால் கருதப்படும் ஞானபீடம் விருது பெறுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

- Advertisement -

இதுவரை தமிழ் பெற்ற இரண்டு விருதுகளும் எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டவை. இப்போதுதான் ஞானபீடம் தமிழ் கவிதைக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. தமிழ் கவிதைக்கு ஞானபீடம் இதுவரை இல்லை என்ற குறை என்னால் கலைந்தது. என்னை வளர்த்த தமிழ் சமுதாயத்தை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.

மண்ணுக்கும் மக்களுக்கும் இந்த விருதை காணிக்கையாக்குகிறேன். இந்த விருது என் வயதை குறைத்து விட்டது. இனி என் பயணம் புதிய பாய்ச்சலோடு தொடரும் என்று கவிஞர் வைரமுத்து அந்தப் பதிவில் கூறியிருக்கிறார். ஞானபீடம் விருது அறிவிக்கப்பட்ட கவிஞர் வைரமுத்துவுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்