இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான படம் காலா. இதில் ரஜினிகாந்த் நாயகனாகவும் நடிகை ராதிகா ஆப்தே ரஜினிக்கு ஜோடியாகவும் நடித்திருந்தனர். இதில் வில்லனாக இந்தி நடிகர் நானா படேகரும் நடித்திருந்தார். ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தை தொடர்ந்து காலா படத்தையும் பா ரஞ்சித் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
காலா படத்தின் கதை மும்பை தாராவியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த படத்தில் ரஜினி தமிழர் நலன் காக்கும் ஒரு தாராவி தாதாவாகவும் அரசியல்வாதி கேரக்டரில் நானா படேகர் வில்லனாகவும் நடித்திருந்தார். இந்த படத்தில் ஒரு போலீஸ் அதிகாரி கேரக்டரில் பாலிவுட்டில் பிரபல நடிகர்களில் ஒருவரான பங்கஜ் திரிபாதி நடித்திருந்தார்.
இவர் மீர்சாபூர் கிரிமினல் ஜஸ்டிஸ் கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் உள்ளிட்ட பல இந்தி படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். ஆனால் காலா படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்து செல்லும் ஒரு போலீஸ் அதிகாரியாக பங்கஜ் திரிபாதி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. காலா படப்பிடிப்பின் போது அங்கு வந்த நானா படேகர், நடிகர் பங்கஜ் திரிபாதியை அங்கு பார்த்துவிட்டு இங்கே என்ன செய்கிறாய் என்று அவரிடம் கேட்டுள்ளார்.
இந்த படத்தில் ஒரு போலீஸ் கேரக்டரில் நடிக்கிறேன் என்று அவர் கூறியதும் எவ்வளவு பெரிய நடிகன் நீ? எதற்காக இந்த சின்ன ரோலிங் நடிக்கிறாய் என்று அவரை திட்டியிருக்கிறார். அதற்கு பங்கஜ் திரிபாதி, ரஜினி நீங்கள் இருவரும் இணைந்து இந்த படத்தில் நடிக்கிறீர்கள். உங்கள் இருவருடனும் நடிப்பதற்காக தான் இந்த படத்தில் இந்த சின்ன கேரக்டரில் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்றும் பங்கஜ் திரிபாதி கூறியிருக்கிறார்.
அதற்கு நானா படேகர், எங்களுடன் சேர்ந்து நடிப்பதால் எல்லாம் நீ பெரிய ஆள் ஆகிவிட முடியாது. ஏனென்றால் ஏற்கனவே நடிப்பில் நீ பெரிய ஆள் தான். அதனால் இது போன்ற சின்ன சின்ன கதாபாத்திரங்களை எல்லாம் இனிமேல் நீ தவிர்க்க வேண்டும். அப்படி ஏதாவது நடித்தால் உன்னை நிச்சயமாக நான் அடிப்பேன் என்று உரிமையுடன் கண்டித்து இருக்கிறார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் நானா படேகர் அவரே இந்த தகவலை வெளிப்படையாக கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நானா படேகர் இந்தியில் பெரிய நடிகர். தமிழிலும் சில படங்களில் நடித்திருக்கிறார் என்றாலும் அவர் மீது அடிக்கடி ஏதேனும் சர்ச்சை விமர்சனம் எழுவது வழக்கம். அதே நேரத்தில் நடிப்பில் அதில் இந்தியில் ஒரு நாசர் என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர். அந்தளவுக்கு நாசர் போல சிறந்த நடிகராக இருந்து வருகிறார்.





