- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினிக்கும், ஜெயலலிதாவுக்கும் பிரச்னை.. தொடக்கப்புள்ளி எங்கிருந்து ஆரம்பித்தது தெரியுமா?

ரஜினிக்கும், ஜெயலலிதாவுக்கும் பிரச்னை.. தொடக்கப்புள்ளி எங்கிருந்து ஆரம்பித்தது தெரியுமா?

- Advertisement -

ரஜினிகாந்த் கடைசியாக நடித்த தர்பார், அண்ணாத்த ஆகிய படங்கள் படுதோல்வியை சந்தித்தன. இதனை அடுத்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்தார். படமானது கடத்த பத்தாம் தேதி வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சக்கை போடு போட்டுவருகிறது.

கடந்த இரண்டு படங்கள் பிளாப் ஆனதால் ரஜினியின் சூப்பர் ஸ்டார் நாற்காலிக்கு ஆபத்து வந்து விட்டதாக பலர் கூறினர் அதேசமயம் விஜய் படங்கள் தொடர்ந்து வரிசையாக 100 கோடி ரூபாய் வசூலிப்பதன் காரணமாக அவரே அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பேச்சு எழ ஆரம்பித்திருக்கிறது. இதனை ரஜினி ரசிகர்கள் சுத்தமாக விரும்பவில்லை.

சூப்பர் ஸ்டார் என்பது ரஜினிக்கு மக்கள் கொடுத்தது. வெறும் அவரது நடிப்பை வைத்து மட்டும் அவருக்கு இந்த பட்டம் கொடுக்கவில்லை. அவரது நல்ல குணத்திற்காகவும் கொடுக்கப்பட்டது என்று பல பல விஷயங்களை ரஜினிகாந்த் ரசிகர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். ரஜினிகாந்த் இப்போது பார்ப்பதற்கு அமைதியாகவும் பக்குவமாகவும் நடந்து கொள்கிறார். ஆனால் தனது கரியரின் ஆரம்பத்திலும் சூப்பர் ஸ்டார் நாற்காலியில் அமர ஆரம்பித்த காலத்திலும் தனது மனதில் பட்டதை பட்டென்று பேசிவிட்டவர் ரஜினிகாந்த். அப்படி அவர் பேசிய பல விஷயங்கள் சென்சேஷனல் டாபிக்காக மாறியவை.

குறிப்பாக அவருக்கும் ஜெயலலிதாவுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தமாக இருந்தது. 1996ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் சமயத்தில் ஜெயலலிதா வந்தால் இனி தமிழ்நாட்டை ஆண்டவனால்கூட காப்பாற்ற முடியாது என பகிரங்கமாக தெரிவித்தார். மேலும் திமுக – தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிக்கு தனது ஆதரவையும் கொடுத்தார் அவர்.

அதேபோல் ஜெயலலிதா ஒரு முறை காரில் சென்று கொண்டிருக்கும்போது ரோடு பிளாக் செய்யப்பட்டதாகவும் அதன் காரணமாக ரஜினிகாந்த் போயஸ் கார்டனில் தன்னுடைய காரில் காத்திருந்ததாகவும்; எனவே கோபத்தில் அவர் இறங்கி நடக்க ஆரம்பித்துவிட்டதால் கூட்டம் சேர்ந்து விட்டதாகவும் ஒரு தகவல் உண்டு.

அதேபோல், பாட்ஷா பட வெற்றி விழாவில் தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் பெருகிவிட்டது என அவர் பேசியது ஜெயலலிதாவுக்கு கோபத்தை ஏற்படுத்த படத்தின் தயாரிப்பாளர் வீரப்பனை அமைச்சர் பதவியில் இருந்து தூக்கினார் ஜெயலலிதா. இப்படி பல பிரச்சனைகள் இருந்தாலும் இருவருக்கும் ஆன பிரச்சனை ஆரம்ப புள்ளி எது என்று பலரும் அறிந்திருக்க மாட்டார்கள்.

அதாவது ஒரு முறை சிவாஜி கணேசனுக்கு திரைத்துறையில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில் கலந்துகொள்வதற்காக ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு அழைப்பு சென்றது. இதில் ஜெயலலிதா மட்டும் அந்த விழாவுக்கு தாமதமாக வந்துவிட்டார். இதை விரும்பாத ரஜினிகாந்த் ஜெயலலிதா வரும்போது எல்லோரும் எழுந்து நிற்க ரஜினிகாந்த் மற்றும் கால் மேல் கால் போட்டுக்கொண்டு ஜெயலலிதாவின் முகத்தைகூட பார்க்காமல் திருப்பி விட்டார். இதுதான் அவர்கள் இருவருக்கும் ஆன பிரச்சனையின் தொடக்கப்பள்ளி என்று பலராலும் கூறப்படுகிறது.

சற்று முன்