- Advertisement -
Homeபொழுதுபோக்குசினிமாவை விட்டு விலகும் முடிவுக்கு வந்துவிட்டாரா நடிகை திரிஷா? விரைவில் அறிவிப்பு வெளியாகுமா? - குழப்பத்தில்...

சினிமாவை விட்டு விலகும் முடிவுக்கு வந்துவிட்டாரா நடிகை திரிஷா? விரைவில் அறிவிப்பு வெளியாகுமா? – குழப்பத்தில் ரசிகர்கள்!

- Advertisement -

கடந்த 2003ம் ஆண்டில் லேசா லேசா படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை திரிஷா. 23 ஆண்டுகளாக நாயகியாக தமிழ் தெலுங்கு மலையாளம் என அவர் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். நடிகை நயன்தாராவுக்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை திரிஷா என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்போது 43 வயதான நிலையில் நடிகை திரிஷா இன்னும் திருமணம் செய்யாமல் முரட்டு சிங்கிளாக இருந்து வருகிறார். தெலுங்கு நடிகர் ராணா டகுபதியுடன் லிவிங் டு ரிலேசன்ஷிப்பில் இருந்த நடிகை திரிஷா பிறகு 2015ம் ஆண்டில் தொழிலதிபர் வருண் மணியன் என்பவரை திருமணம் செய்வதாக இருந்தார்.

- Advertisement -

ஆனால் நிச்சயதார்த்தத்துடன் அந்த திருமணம் நின்று போனது. இந்த சூழ்நிலையில் நடிகை திரிஷா தவெக தலைவர் நடிகர் விஜயுடன் நெருக்கமான நட்பில் இருந்து வருகிறார். ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருப்பதாக அவரது மனைவி சங்கீதா கூறிய நிலையில், விஜய் திரிஷா இருவரும் ஜோடியாக ஒரு திருமண விழாவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் இப்போது ஒரு லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நடிகை திரிஷா விரைவில் சினிமாவை விட்டு விலகப் போவதாகவும் நடிப்பில் இருந்து முழு ஓய்வை அறிவிக்கப் போவதாகவும் ஒரு தகவல் கசிந்துள்ளது. ஏனெனில் கடந்த 3 மாதங்களாக அவர் எந்த ஒரு படத்திலும் புதியதாக நடிக்க கமிட் ஆகவில்லை என்றும் உறுதியாக கூறப்படுகிறது.

- Advertisement -

நடிகை திரிஷா நடித்த கருப்பு விஸ்வம்பரா போன்ற படங்கள் வெளியாக உள்ள நிலையில் அவர் அடுத்து தமிழ் தெலுங்கு மலையாளம் என எந்த ஒரு படத்திலும் நடிக்க கமிட் ஆகாத நிலையில் விரைவில் தனது சினிமா விலகல் முடிவை அறிவிப்பார் என்றும் சொல்லப்படுகிறது. இதற்கு பின்னால் இன்னும் சில முக்கிய காரணங்கள் இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.

அதாவது நடிகர் விஜயுடன் நெருக்கமான நட்பில் உள்ள நடிகை திரிஷா மிக விரைவில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைவார் என்றும் அவருக்கு கட்சியில் மிக முக்கியமான மகளிரணி பொறுப்பை தலைவர் விஜய் வழங்க உள்ளார் என்றும் தேர்தல் பிரசாரத்தில் கூட திரிஷா ஈடுபட வாய்ப்புள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது. ஆனால் இந்த தகவல்கள் எதுவும் உறுதி செய்யப்படவில்லை. இவை எல்லாம் உருட்டா அல்லது உண்மையா என்பது வரும் நாட்களில் உறுதியாகி விடும்.

- Advertisement -

சற்று முன்