- Advertisement -
Homeபொழுதுபோக்குசட்டசபை தேர்தல் நேரத்தில் களத்தில் குதிக்கும் அமாவாசை, சத்யராஜ் மணிவண்ணன் கூட்டணியில் உருவான படம் -...

சட்டசபை தேர்தல் நேரத்தில் களத்தில் குதிக்கும் அமாவாசை, சத்யராஜ் மணிவண்ணன் கூட்டணியில் உருவான படம் – 32 ஆண்டுகளுக்கு பிறகு ரி ரிலீஸ்!

- Advertisement -

நடிகர்கள் சத்யராஜ் கவுண்டமணி, நடிகர் சத்யராஜ் மணிவண்ணன் கூட்டணி என்றாலே அங்கே அதிரிபுதிரியாக தான் இருக்கும். காமெடி கூட்டணிக்கு கவுண்டமணியுடனும் அரசியல் நையாண்டி கூட்டணிக்கு மணிவண்ணனுடனும் சேர்ந்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் லொள்ளு நக்கல் பேசி ஜெயித்தவர் நடிகர் சத்யராஜ் என்றால் அது மிகையல்ல.

கடந்த 1994ம் ஆண்டில் இயக்குனர் மணிவண்ணன் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் இரட்டை வேடங்களில் அப்பா மகன் கேரக்டர்களில் நடித்து வெளியான படம் அமைதிப்படை. இந்த படத்தில் கஸ்தூரி ரஞ்சிதா சுஜாதா மணிவண்ணன் ஆர் சுந்தர்ராஜன் எஸ்எஸ் சந்திரன் காந்திமதி அல்வா வாசு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

- Advertisement -

இதில் மைக்செட் மணிமாறன் என்ற அரசியல்வாதி கேரக்டரில் மணிவண்ணன் நடித்திருப்பார். தன்னிடம் வேலைக்காரனாக இருக்கும் அமாவாசை என்கிற நாகராஜ சோழனை அவர் தேர்தலில் நிற்க வைத்து ஜெயிக்கவும் வைப்பார். பிறகு அமாவாசையின் அடிமையாக மணிவண்ணன் அடங்கி நடப்பார்.

அரசியலில் ஜெயிக்க அரசியல்வாதி சத்யராஜ் செய்யும் அடாவடிகளும் அக்கிரமங்களும்தான் படத்தின் கதைக்களமாக இருந்தது. இதில் மகனாக வம் சத்யராஜ் போலீஸ்காராக இருந்து அப்பா சத்யராஜின் முகத்திரையை இறுதியில் கிழிப்பதுதான் கதை. படம் முழுவதும் அரசியல் நையாண்டிகளும் கிண்டலும் கேலியும் என சத்யராஜ் மணிவண்ணன் கூட்டணி ரவுண்டு கட்டி அடித்திருக்கும்.

- Advertisement -

அமைதிப்படை படம் வெளியாகி ஏறக்குறைய 32 ஆண்டுகள் ஆன நிலையில் இப்போது மீண்டும் இந்த படம் திரைக்கு 4கே தொழில்நுட்பத்தில் டால்பின் ஒலி தொழில்நுட்பத்தில் புதுப்பொலிவுடன் திரைக்கு வர உள்ளது. வருகிற ஏப்ரல் 10ம் தேதி அமைதிப்படை படம் மீண்டும் திரையரங்குகளில் ரி ரிலீஸ் செய்யப்படுகிறது.

இப்போது தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. திமுக அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நாம்தமிழர் கட்சி தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் தனித்தும் தேர்தல் களத்தில் நிற்கின்றன. இந்த ஒரு சூழ்நிலையில் அரசியல் நையாண்டி பேசும் அமைதிப்படை படம் ரி ரிலீஸ் செய்யப்படுவது சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்