- Advertisement -
Homeபொழுதுபோக்குவாழ்க்கையில் 25 வருஷமா திருந்தாதவன் இரண்டரை மணி நேரம் படம் பார்த்தா திருந்திடுவானா? - கன்னட...

வாழ்க்கையில் 25 வருஷமா திருந்தாதவன் இரண்டரை மணி நேரம் படம் பார்த்தா திருந்திடுவானா? – கன்னட நடிகர் சுதீப் ஆவேசம்!

- Advertisement -

ஒரு காலகட்டத்தில் திரைப்படங்கள் என்பது பொழுதுபோக்கு அம்சங்களை மட்டுமே மையப்படுத்தியதாக இருந்தது. நல்ல கதைக்களம் சிறந்த நடிகர்கள் காமெடி காதல் குடும்ப சென்டிமென்ட் உறவுகளின் பிணைப்பை மையப்படுத்திய படங்களாக வெளிவந்தன. இதில் நல்ல சமுதாய கருத்துகளும் இருந்தன.

குறிப்பாக பேமிலி டிராமா என அழைக்கப்பட்ட குடும்ப பின்னணியில் உருவான கதைகளில் குடும்பம் சார்ந்தும் குடும்ப உறவுகள் சார்ந்தும் அதில் ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் படங்கள் பேசியது. சம்சாரம் அது மின்சாரம் வேடிக்கை என் வாடிக்கை வரவு நல்ல உறவு பெண்மணி அவள் கண்மணி போன்ற விசு இயக்கிய படங்கள் போல ஏராளமான படங்கள் வெளியாகின.

- Advertisement -

அதே வரிசையில் இயக்குனர் வி சேகர் இயக்கிய குடும்ப கதை படங்களும் காமெடி கலந்து வெளியாகி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றன. ஆனால் கமர்ஷியல் என்ற பெயரில் வில்லன்களை பழிவாங்கும் ஹீரோக்களின் கதைகளே அதிகளவில் வெளியாகின. ரஜினி கமல் போன்றவர்கள் வில்லன்களை பழிவாங்கும் ஹீரோக்களாகவே அன்றும் இருந்தனர். இன்றும் இருக்கின்றனர்.

அதிலும் இப்போது நெல்சன் லோகேஷ் கனகராஜ் கார்த்திக் சுப்பராஜ் போன்றவர்கள் கத்தி அரிவாள் துப்பாக்கி வெடிகுண்டு போதைப்பொருள் கலாசாரம் என தமிழ் சினிமாவின் நகர்வை வேறு ஒரு இடத்துக்கு கொண்டு சென்றுவிட்டனர். மொத்தத்தில் தமிழ் சினிமாவின் எதிர்காலம் என்பதே கேள்விக்குறியாக மாறிக்கொண்டு வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் ஒரு நேர்காணலில் பேசிய கன்னட நடிகர் கிச்சா சுதீப் கூறியதாவது, சினிமா யாரையும் டச் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. சினிமா ஒரு பொழுதுபோக்கு. இரண்டரை மணி நேரம் ஒதுக்கி படம் பார்க்க வர்றவங்களுக்கு நல்ல பொழுதுபோக்கு படம் கொடுத்தால் போதும்.

தியேட்டருக்குள் அவங்களை உட்கார வைத்து கிளாஸ் எடுத்துட்டு இருக்க கூடாது. அதுவல்ல சினிமாவின் வேலை. வாழ்க்கையில 25 வருஷமா திருந்தாதவன் இரண்டரை மணி நேர சினிமா பார்த்துதான் திருந்த போறானா? இல்ல கெட்டுப் போகப் போறானா? அதெல்லாம் கிடையாது என்று சுதீப் அந்த நேர்காணலில் ஆவேசமாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்