- Advertisement -
Homeபொழுதுபோக்குஆமா விஜய் திரிஷா பத்தி நான் பேசினது உண்மைதான், அதுக்காக வருத்தப்படலே - கெத்தாக பதில்...

ஆமா விஜய் திரிஷா பத்தி நான் பேசினது உண்மைதான், அதுக்காக வருத்தப்படலே – கெத்தாக பதில் சொன்ன இயக்குனர் சமுத்திரக்கனி!

- Advertisement -

நடிகர் விஜய் சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் இப்போது முக்கிய நட்சத்திரமாக மாறியிருக்கிறார். இந்த சூழலில் அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருக்கிறார். அப்படிப்பட்ட நிலையில் நடிகர் விஜய் நடிகை திரிஷாவுடன் ஜோடியாக ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றது பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பிய நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு இயக்குனர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி வந்திருந்த போது, அவர் அருகில் நின்றிருந்தவர்களிடம் இதுபற்றி பேசிக்கொண்டு இருந்தார். அப்போது சமுத்திரக்கனி, இது என்ன விளையாட்டா? எவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்கு.

- Advertisement -

நீ அவங்களை கூட்டிகிட்டு வருவே? நாலு சுவத்துக்குள்ள வெச்சுக்கய்யா. யாரை பழிவாங்கறே நீ? எதுக்கு இந்த போஸ்? நல்லா இருந்துச்சு. இதுக்கு மேல முட்டுக் கொடுக்க முடியாதுன்னு கட்சிக்காரனே சொல்றான் என்று சமுத்திரக்கனி கோபமாக அந்த வீடியோவில் விஜய் குறித்து விமர்சனம் செய்து பேசியிருந்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் சமுத்திரக்கனியிடம் இது குறித்து கேட்டபோது அவர் கூறியதாவது, அது பேசியது நான்தான். நான் அங்கு பேசியதை ஒரு தம்பி வீடியோ எடுத்த போது எனக்கு அது தெரியும். அவர் முன்னுரையை எடுக்கவில்லை. முடிவுரையை தான் எடுத்தார்.

- Advertisement -

அவர் கையில் போன எடுத்தாருன்னு நான் பேசாமல் இருக்க முடியாது. சாப்பிட மட்டும் தான் வாயை திறக்கணும் போல. எனக்கு உள்ளே ஒன்று வைத்துக் கொண்டு வெளியே ஒன்று பேசத் தெரியாது. நான் பேசிய அந்த வீடியோ வந்ததும் பைட் மாஸ்டர் தம்பி ஒருவர் போன் செய்து, அண்ணா அந்த வீடியோவை நீக்க வைக்கவும் என்றார்.

அது எனக்கு தெரியாமல் எடுத்தது இல்லை. நீ டென்ஷன் ஆகாதே என்றேன். நான் அப்படி பேசியதில் வருத்தமும் இல்லை. அக்கறையாய் ஏற்பட்ட வலி தான் அப்படி பேச காரணம் என்று இயக்குனர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி வெளிப்படையாக கூறியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

- Advertisement -

சற்று முன்