தமிழ் சினிமாவில் நல்ல படங்களை தரும் இயக்குனர்களில் மிக முக்கியமானவர் ஏஆர் முருகதாஸ். அவர் இயக்கத்தில் வெளியான தீனா கஜினி ரமணா துப்பாக்கி கத்தி சர்கார் மதராஸி போன்ற படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படங்களாக இருந்தன. இதில் சர்கார் மதராஸி படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
இதற்கிடையே இந்தியிலும் அமீர்கான் மற்றும் சல்மான்கான் நடித்த படங்களை இயக்கிய ஏஆர் முருகதாஸ் இயக்கிய ரஜினி படம் சர்கார். இந்த படம் கடும் விமர்சனங்களால் தோல்வியை சந்தித்த நிலையில் 7 ஆண்டுகள் கழித்து ஏஆர் முருகதாஸ் இயக்கிய படம் மதராஸி. இதில் ருக்மணி வசந்த் நாயகியாக நடித்திருந்தார்.
காதல் மற்றும் காமெடி திரைக்கதைகளில் இதுவரை நடித்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன் மதராஸி படத்தில் முழுக்க முழுக்க ஆக்சன் ஹீரோவாக அட்டகாசமாக நடித்திருந்தார். ஆனால் படம் எதிர்பார்த்த வரவேற்பை ரசிகர்களிடம் பெறவில்லை. வழக்கமான ஏஆர் முருகதாஸ் படம் போல இல்லை என்றும் விமர்சனம் எழுந்தது.
இந்த சூழலில் ஏஆர் முருகதாஸ் அடுத்ததாக நடிகர் சிம்பு நடிக்கும் படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் நடிகர் சிம்பு இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் நடித்து வருகிறார். பிறகு அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். டியூட் பட இயக்குனர் கீர்த்தீஸ்வரன் படத்திலும் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார்.
அதனால் எப்படியும் சிம்பு கால்ஷீட் கிடைக்க குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் ஆகும் என்ற சூழ்நிலையில் சிம்பு படம் அப்புறம், முதலில் குரங்குவை வைத்து தனது கனவு படத்தை இயக்கி விடுவோம் என்ற முடிவுக்கு ஏஆர் முருகதாஸ் இப்போது வந்திருக்கிறார். முதல் படமான தீனா படம் இயக்குவதற்கு முன்பே ஏஆர் முருகதாஸ் இயக்க ஆசைப்பட்டது இந்த குரங்கு படம்தான்.
குரங்குவை மையப்படுத்திய இந்த படத்தின் கதை களத்தில் படம் முழுவதும் குரங்கு சார்ந்த விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்துடன் இந்த படம் உருவாக உள்ளது. இதுதான் தனது லட்சியப் படம் என்றும் முதலில் தீனா படத்துக்கு முன்பே இயக்க ஆசைப்பட்டது இந்த குரங்கு படத்தை தான் என்றும் ஏற்கனவே ஏஆர் முருகதாஸ் கூறியிருந்த நிலையில் இப்போது இந்த படத்தை உருவாக்கும் ஆரம்பகட்ட பணிகளில் ஏஆர் முருகதாஸ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.





