- Advertisement -
Homeபொழுதுபோக்குகொல்கத்தா ரோட்டில் நடந்துசென்ற புரட்சித் தலைவர் எம்ஜிஆர் - கதறி அழுத மூதாட்டி -...

கொல்கத்தா ரோட்டில் நடந்துசென்ற புரட்சித் தலைவர் எம்ஜிஆர் – கதறி அழுத மூதாட்டி – தலைவர் செய்த தரமான சம்பவம்!

- Advertisement -

கொல்கத்தாவில் உள்ள லேக் ஏரியா தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியாகும். கடந்த 1982-ம் ஆண்டில் அங்கு கட்டப்பட்ட தமிழ்ச்சங்கக் கட்டிடத்தை தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். திறந்து வைத்தார். அந்தக் கட்டிடம் கட்டுவதற்காக ரூ.5 லட்சம் நன்கொடையாக அளித்தார். இதற்காக கொல்கத்தா சென்ற எம்ஜிஆரை ஆளுநர் மாளிகைக்கு அழைத்துச் சென்றனர். அங்குதான் 2 நாட்களும் எம்.ஜி.ஆர். தங்குவதாக ஏற்பாடு.

ஆனால் எம்ஜிஆர் திடீரென ஓட்டலுக்கு சென்று அங்கு தங்க முடிவெடுத்தார். இங்கே எல்லா வசதிகளும் உள்ளன. ஆனால் நிறைய தமிழர்கள் என்னைப் பார்க்க வருவார்கள். கட்டுப்பாடுகள் நிறைந்த கவர்னர் மாளிகைக்குள் அவர்களால் நுழைய முடியாது. அவர்களுக்கு வசதியான இடத்தில் நான் இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு கவர்னர் மாளிகையில் இருந்து கிளம்பிவிட்டார்.

- Advertisement -

அதே பகுதியில் இருந்த டல்ஹவுசி சதுக்கத்தில் ஒரு ஓட்டலில் தனது அதிகாரிகள் உதவியாளர்களுடன் தங்கினார். தமிழ் சங்கக் கட்டிடத் திறப்பு விழாவுக்கு மறுநாள் காலை திடீரென தான் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து புறப்பட்டு சாலையில் இறங்கி எம்ஜிஆர் நடக்க ஆரம்பித்து விட்டார். அங்கு வந்திருந்த தமிழ்ச் சங்க நிர்வாகிகளும் எம்ஜிஆரோடு நடந்தனர்.

சாலையில் கொய்யாப் பழம் விற்றுக் கொண்டிருந்த வயதான தமிழ்ப் பெண்ணிடம் பழம் என்ன விலை? என்று கேட்டார். அந்த மூதாட்டியும் சலிக்கவில்லை. எம்ஜிஆரை நேரில் பார்த்த மகிழ்ச்சியில் அந்த மூதாட்டி, உனக்குப் போய் விலை சொல்ல முடியுமாய்யா? எல்லாமே உனக்குத்தான் எடுத்துக்கோ சாமி’ என்று அன்பாக கூறினார்.

- Advertisement -

அந்த மூதாட்டி நினைத்துப் பார்க்காத ஒரு தொகையை அவர் கையில் திணித்த எம்ஜிஆர் கூடையில் இருந்த மொத்த பழங்களையும் எடுத்து அருகே இருந்தவர்களுக்கு கொடுத்துவிட்டு அந்த மூதாட்டியிடமும் பழத்தைக் கொடுத்து நீயும் சாப்பிடு என்றார். அந்த மூதாட்டிக்கு அழுகை வந்துவிட்டது. நீ நல்லா இருக்கணும் ராசா என்று கூறிக்கொண்டே காலில் விழ முயன்றவரை தடுத்து அணைத்து ஆறுதல் கூறினார் எம்.ஜி.ஆர்.

தன்னை சந்திக்க வரும் மக்களின் வசதிக்காக சாதாரண ஓட்டலில் தங்கிய எம்ஜிஆர், தன்னை பார்க்க விரும்பும் மக்களுக்காக முதல்வராக காரில் உல்லாசமாக செல்லாமல் ரோட்டில் நடந்த சென்று மக்களை சந்தித்து இருக்கிறார். கொய்யாப்பழம் விற்ற பாட்டியிடம் ஒரு சாதாரண மனிதர் போல பேசி பழகியிருக்கிறார். இதுபோன்ற உயர்ந்த பண்புகளால் தான் இன்றும் எம்ஜிஆர் மக்கள் தலைவராக கொண்டாடப்படுகிறார். அவர் சினிமாவில் தான் நடித்தார். ஆனால் உண்மையில் உயர்ந்த பண்பான மனிதராக வாழ்ந்தார்.

- Advertisement -

சற்று முன்