- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவான படம் - 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரைக்கு வருகிறதா?...

இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவான படம் – 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரைக்கு வருகிறதா? இன்றைய ஜென்ஸி கூட்டத்திடம் இந்த படம் ஜெயிக்குமா?

- Advertisement -

வழக்கமாக அரசியல்வாதிகளின் ஊழல் அரசு துறை அதிகாரிகளின் லஞ்சம் போன்ற விஷயங்களை மையப்படுத்தி படம் எடுத்தவர் இயக்குனர் ஷங்கர். ஆனால் அவரது இயக்கத்தில் டீன் ஏஜ் வயதினரை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் தான் பாய்ஸ். கடந்த 2003ம் ஆண்டில் இந்த படம் வெளியானது.

இந்த படத்தில் தான் சித்தார்த் தமன் மணிகண்டன் பரத் மற்றும் நகுல் ஆகியோர் இளம் நடிகர்களாக அறிமுகமானார்கள். ஜெனிலியாே நாயகியாக நடித்திருந்தார். விவேக் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். ஜாலியான 5 நண்பர்களில் ஒருவர் காதலிக்க அவரது காதலுக்கு நண்பர்கள் துணை நிற்பதால் வீட்டை விட்டு வெளியேற்றப்படுகின்றனர்.

- Advertisement -

பெற்றோர் ஆதரவின்றி நிற்கும் அவர்கள் தங்களது இசை திறமையால் ஜெயிக்க நினைக்கின்றனர். அவர்களுக்கு பக்கபலமாக விவேக் இருக்கிறார். அந்த சூழலில் ஏற்படும் ஒரு பிரச்னையால் படத்தின் நாயகன் முன்னா, நாயகி ஹரிணி பிரிய நேரிடுகிறது. முடிவில் என்ன நடக்கிறது என்பதுதான் பாய்ஸ் படத்தின் கதை.

ஒண்டிக்குடித்தன வாழ்க்கை வசதியான குடும்பம் பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையே உள்ள இடைவெளி படிப்பு வசதி சார்ந்த பெற்றோரின் பார்வை மற்றும் டீன் ஏஜ் வயதினரின் ஆசைகள் என பல விஷயங்களை உள்ளடக்கிய இந்த படத்தை ஒரு தரப்பினர் ரசித்த போதும் மற்ற ஷங்கர் படங்களுக்கு கிடைத்த வரவேற்பு தமிழ்நாட்டில் பாய்ஸ் படத்துக்கு கிடைக்கவில்லை.

- Advertisement -

பாய்ஸ் படத்தை தயாரித்த ஸ்ரீ சூர்யா மூவிஸ் தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது, பாய்ஸ் படம் வெளியான காலகட்டத்தில் தமிழகத்தில் தான் இந்த படம் சரியாக ஓடவில்லை. ஆனால் தெலுங்கு மலையாளம் மொழிகளில் பாய்ஸ் படம் பெரிய வெற்றியை பெற்றது. தமிழ்நாட்டில் தியேட்டர்களில் பெரிய அளவில் யாரும் பார்க்கவில்லை.

இப்போது நினைத்தால் கூட என்னால் மற்றும் ஷங்கரால் பாய்ஸ் மாதிரி ஒரு படத்தை உருவாக்க முடியாது. அதனால் மிக விரைவில் பாய்ஸ் படத்தை ரி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளேன் என்று தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் கூறியிருக்கிறார். இந்தியன் கில்லி தூள் சிவகாசி குஷி ஆரம்பம் வேதாளம் போன்ற சூப்பர் ஹிட் படங்களை தயாரித்தவர் இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்