நடிகர் விஜய் நடிப்பில் உருவான படம் ஜனநாயகன். வருகிற 2026ம் ஆண்டில் ஜனவரி 9ம் தேதி பொங்கல் பண்டிகை நேரத்தில் ரிலீஸ் ஆகிறது. பெங்களூருவை சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் என்று நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. எச் வினோதம் இயக்கத்தில் அனிருத் இசையில் விஜய்க்கு ஜோடியாக படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார்.
மேலும் ஜனநாயகன் படத்தில் பிரியாமணி மமிதா பைஜூ பாபி தியோல் நரேன் கௌதம் மேனன் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். மேலும் ஒரு காட்சியில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்தும் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் ஒரு காட்சியில் இயக்குனர்கள் நெல்சன் அட்லி லோகேஷ் கனகராஜ் ஆகிய 3 பேரும் பத்திரிகையாளர்களாக ஜனநாயகன் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. விஜயின் படங்களை இயக்கிய விஜயின் நெருங்கிய நண்பர்கள் இவர்கள் என்பதால், விஜயின் கடைசி படத்தில் இப்படி ஒரு காட்சியில் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு முன்பு விஜய் நடித்த லியோ மற்றும் தி கோட் ஆகிய படங்களுக்கு இசை வெளியீட்டுவிழா நடத்தப்படவில்லை. இதற்கு ஆளுங்கட்சி திமுக தரப்பில் கொடுக்கப்பட்ட மறைமுக அழுத்தமும் இடையூறுகளும்தான் காரணம் என்று தெரிய வந்துள்ளது. ஆனால் ஜனநாயகன் விஜயின் கடைசி படம் என்பதால் மலேசியாவில் வரும் டிசம்பர் மாதம் இசை வெளியீட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் அஜீத்குமார் தனுஷ் சூர்யா கார்த்தி ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளதாகவும், அவர்களுக்கு விஜய் தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. இதில் கமல்ஹாசன் திமுக ஆதரவாளராக இருந்தாலும் விஜய் என் தம்பி என்று அவர் சமீபத்தில் கூறியிருப்பதால் ஒரு அரசியல்வாதியாக இல்லாமல் மூத்த சினிமா கலைஞராக ஜனநாயகன் பட விழாவில் பங்கேற்க அதிக வாய்ப்புள்ளது.
ஆனால் ஜனநாயகன் பட விழாவில் நடிகர் அஜீத்குமார் பங்கேற்பார் என்று கூறியிருப்பதை தான் பலரும் கடுமையாக விமர்சிக்கின்றனர். அஜீத்குமார் அவர் நடித்த படங்களின் பிரமோசனுக்கே வரமாட்டார். விஜய் பட விழாவுக்கு வருவாரா? சும்மா காமெடி பண்ணாதீங்கப்பா என்று விஜய் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். ஆனால் விஜய்க்காக இந்த விழாவில் அஜீத்குமார் பங்கேற்க வாய்ப்புள்ளது. இதன்மூலம் மறைமுகமாக விஜய்க்கும் அவரது கட்சிக்கும் தனது ஆதரவை அவர் தெரிவிக்கவும் இது காரணமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.





