இயக்குனர் சசி இயக்கத்தில் ரோஜா கூட்டம் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். இந்த படத்தில் பூமிகா நாயகியாக நடித்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தொடர்ந்து ஸ்ரீகாந்த் பல படங்களில் நடித்தார்.
குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் போஸ் பார்த்திபன் கனவு ரெடி ஜூட் மெர்க்குரி பூக்கள் வர்ணஜாலம் என பல படங்கள் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. குறிப்பாக ஷங்கர் இயக்கத்தில் உருவான நண்பன் படத்தில் விஜய் ஜீவா ஆகியோருடன் ஸ்ரீகாந்த் இணைந்து நடித்திருந்தார்.
நல்ல அழகும் கம்பீரமான உயரமும் கொண்ட நடிகர் ஸ்ரீகாந்த் தொடர்ந்து நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடித்திருந்தால் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இடத்தை பிடித்திருப்பார். ஆனால் நல்ல நல்ல பட வாய்ப்புகளை அவரது மேனேஜராக இருந்த சித்தப்பா நிராகரித்த நிலையில் அவரது வெற்றி பாதிக்கப்பட்டது.
மேலும் சமீபத்தில் போதை பொருள் பயன்படுத்திய வழக்கிலும் நடிகர் ஸ்ரீகாந்தை் கைது செய்யப்பட்டது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் போதை பொருள் பயன்படுத்திய பார்ட்டிகளில் கலந்துக்கொண்டதும் அவரே சிலரிடம் நேரடியாக போதைப் பொருள் வாங்கியதாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் குறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் அந்தணன் கூறியதாவது, ரோஜா கூட்டம் படம் வெளியான புதிதில் புதிதாக லான்சர் கார் ஒன்றை ஸ்ரீகாந்த் வாங்கி இருந்தார். தனது நண்பருடன் சென்னை முழுவதும் நள்ளிரவில் காரில் ரேஸ் ஓட்டினார் ஸ்ரீகாந்த். அப்போது திடீரென ஒரு நபர் குறுக்கே வந்து விட்டார்.
அந்த நேரத்தில் அவரை இடித்து விடக்கூடாது என இளையராஜா ஸ்டுடியோ அருகில் இருந்த எலக்ட்ரிக் ஷாப்பில் காரை விட்டு அந்த கார் மறுபுறம் வந்து போஸ்ட் கம்பம் ஒன்றின் மீது எடுத்து மோதி நின்றது. அதன் அருகே பிளாட்பாரத்தில் பலர் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். நல்ல வேளையாக அந்த இடத்தில் போஸ்ட் கம்பம் இல்லை என்றால் அப்போதே எட்டு பேர் மீது காரை ஏற்றி பெரிய சிக்கலில் ஸ்ரீகாந்த் சிக்கி இருப்பார் என்று அந்தணன் நேர்காணலில் கூறியிருக்கிறார்.





