- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனர் மணிவண்ணன் சொன்ன அந்த விஷயம், அமைதிப்படை படத்தில் பிரதமர் நடித்திருக்கிறாரா? - நடிகர் சத்யராஜ்...

இயக்குனர் மணிவண்ணன் சொன்ன அந்த விஷயம், அமைதிப்படை படத்தில் பிரதமர் நடித்திருக்கிறாரா? – நடிகர் சத்யராஜ் சொன்ன தகவல்!

- Advertisement -

கடந்த 1994ம் ஆண்டில் இயக்குனர் மணிவண்ணன் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் இரட்டை வேடங்களில் நடித்த படம் அமைதிப்படை. இந்த படத்தில் கஸ்தூரி ரஞ்சிதா சுஜாதா மணிவண்ணன் ஆர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அரசியல் நையாண்டி கதைக்களத்தில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. வருகிற ஏப்ரல் 10ம் தேதி இந்த படம் ரி ரிலீஸ் செய்யப்படுகிறது.

சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் நடிகர் சத்யராஜ் கூறியதாவது, நான் 75 படங்களில் வில்லனாக நடிச்சிட்டு அப்புறம் ஹீரோவாக ஆனேன். ஹீரோ ஆன பிறகு என்னுடைய அத்தனை படங்களும் பெரிய ஹிட் படங்கள் தான். உடன்பிறப்பு படம் ஷூட்டிங் நடக்கும்போதுதான் அமைதிப்படை கதையை மணிவண்ணன் என்னுடைய வீட்டுக்கு வந்து சொன்னார்.

- Advertisement -

அப்போது நான் அவர்கிட்ட, தலைவரே, நீங்கதான் எனக்கு லைஃப் கொடுத்தீங்க. மறுபடியும் வில்லன் பண்ணணுமான்னு யதார்த்தமாக கேட்டேன். இந்தப் படத்துக்கு 70 நாள் கால்ஷீட் போச்சு. நிறைய ஜூனியர் ஆர்டிஸ்ட் வச்சு மணிவண்ணன் பெரிய அளவில் எடுத்தார்.

ஆனால் வழக்கமாக அவரது படங்களுக்கு இத்தனை நாட்கள் எல்லாம் ஷூட்டிங் எடுக்க மாட்டார். 30 35 நாளுக்குள்ள மொத்த படத்தையும் எடுத்து முடிப்பதுதான் அவரது வழக்கம். அதனால் எதுக்காக சொந்தப் படத்துக்கு இவ்வளவு செலவு பண்றீங்கன்னு ஒருமுறை அவர் கேட்டேன்.

- Advertisement -

அதற்கு மணிவண்ணன், இந்தப் படத்தோட அறிவிப்பு வந்ததும் கன்னா பின்னானு பெரிய விலைக்கு வித்துட்டேன். 40 நாள் மட்டும் ஷூட்டிங் பண்ணினால், தப்பா நினைச்சுப்பாங்கன்னு சொன்னார். அதுக்காக அத்தனை நாள் ஷூட் பண்ணினார். அமைதிப்படை ஒரு கல்ட் ஃபிலிம். அதுக்கு முன்னும் பின்னும் இப்படியான ஒரு படம் வரலே. 2கே கிட்ஸ் எல்லாம் எனக்கு ஃபேன் கிடையாது.

நான் இருபது வருஷமாக கேரக்டர் ரோல்களில் நடிச்சிட்டு வர்றேன். ரஞ்சிதா கைலாசாவுல இருக்கிறதாக சொல்றாங்க. அப்படின்னு ஒரு நாடு இருக்கிறதாக சொல்றாங்க. அவங்கதான் அந்த நாட்டுக்கு பிரதமருன்னு சொல்றாங்க. மூணு முதலமைச்சர்கள் நடிச்ச படம் இங்க இருக்கு. ரஞ்சிதா பிரதமருங்கிறது உண்மைன்னா ஒரு பிரதமர் நடிச்ச ஒரே படம் இதுதான் என்று நடிகர் சத்யராஜ் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்