- Advertisement -
Homeபொழுதுபோக்குநயன்தாராவை படத்தை தள்ளிப் போட லீடர் பட இயக்குனர் துரை செந்தில்குமார் - அடேங்கப்பா இதுதான்...

நயன்தாராவை படத்தை தள்ளிப் போட லீடர் பட இயக்குனர் துரை செந்தில்குமார் – அடேங்கப்பா இதுதான் காரணமா?

- Advertisement -

தனுஷ் திரிஷா நடித்த கொடி நடிகர்கள் சூரி சசிக்குமார் இணைந்து நடித்த கருடன் போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் துரை செந்தில்குமார். அதன்பிறகு லெஜண்ட் அருள் சரவணன் நடிப்பில் உருவான லீடர் என்ற படத்தை அவர் டைரக்ட் செய்திருக்கிறார். அந்த படம் நாளை 3ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகிறது.

லீடர் படத்தை தொடர்ந்து இயக்குனர் துரை செந்தில்குமார் அடுத்ததாகவும் லெஜண்ட் அருள் சரவணன் நடிக்கும் ஒரு படத்தை தான் டைரக்ட் செய்ய உள்ளார். இந்த படம் ஒருவேளை லீடர் 2 படமாகவும் மாற வாய்ப்புள்ளது. லீடர் படம் பிளாக்பஸ்டர் படமாக இருந்தால் அதன் தொடர்ச்சியாக லீடர் 2 என அந்த படம் உருவாகலாம்.

- Advertisement -

ஆனால் கருடன் படத்தை துரை செந்தில்குமார் டைரக்ட் செய்த போதே நடிகை நயன்தாரா நடிக்கும் ஒரு படத்தை டைரக்ட் செய்ய துரை செந்தில்குமார் கமிட் செய்யப்பட்டார். இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாராவும் அத்துடன் ஒரு யானையும் இந்த படத்தில் நடிப்பதாக இருந்தது. இந்த படத்தை ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் நயன்தாராவே சொந்தமாகவும் தயாரிக்க இருந்தார்.

அந்த படத்தின் படப்பிடிப்பு துவங்குவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் தான் துரை செந்தில்குமார் லெஜண்ட் அருள் சரவணன் நடிப்பில் லீடர் படத்தை இயக்க கமிட் ஆனார். ஆனால் இப்போது லீடர் படம் முடிந்து விட்டதால் நயன்தாரா தயாரித்து அவரே கதையின் நாயகியாக நடிக்கும் படத்தை அடுத்து துரை செந்தில்குமார் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

இப்போதைய லேட்டஸ்ட் தகவலின்படி லெஜண்ட் அருள் சரவணன் நடிக்கும் அடுத்த 3வது படத்தை தான் துரை செந்தில்குமார் டைரக்ட் செய்ய உள்ளார். நயன்தாரா படத்தை அவர் மீண்டும் தள்ளி வைத்து விட்டார். ஒருவேளை லெஜண்ட் அருள் சரவணன் நடிக்கும் புதிய படத்தை இயக்கி முடித்த பிறகு வேண்டுமானால் நயன்தாரா படத்தை இயக்க அவர் இயக் வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

லீடர் படப்பிடிப்பின் போது துரை செந்தில்குமாரின் அணுகுமுறை அவரது பணி மற்றும் செயல்பாடுகளை பார்த்து மிகவும் பிடித்துப் போனதால் அப்போதே என்னுடைய அடுத்த படத்தையும் நீங்களே டைரக்ட் செய்யுங்க என்று லெஜண்ட் அருள் சரவணன் கூறியிருக்கிறார். அத்துடன் 1 கோடி ரூபாய் முன்பணமும் இயக்குனருக்கு கொடுத்துள்ளார். அப்புறம் எப்படி நயன்தாரா படத்தை இயக்க துரை செந்தில்குமார் ஆர்வம் காட்டுவார் என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்