இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற படம் டிமாண்டி காலனி. திரில்லர் கதைக்களத்தில் உருவான இந்த படம் பெரிய வரவேற்பை பெற்றது. அருள்நிதி நாயகனாக நடித்த இந்த படம் காட்சிக்கு காட்சி விறுவிறுப்பாகவும் திகிலாகவும் இருந்து ரசிகர்களை பயமுறுத்தியது.
அதன்பிறகு 2024ம் ஆண்டில் தீபாவளிக்கு வெளியான படம் டிமாண்டி காலனி 2. இந்த படத்தில் அருள்நிதி இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். மேலும் பிரியா பவானி சங்கர் மிக அற்புதமான நடிப்பை தந்திருந்தார். அருண் பாண்டியன் நடிப்பும் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தொடர்ந்து டிமாண்டி காலனி 3ம் பாகம் இப்போது உருவாகி உள்ளது.
இதுகுறித்து இயக்குனர் அஜய் ஞானமுத்து கூறியதாவது, தயாரிப்பாளரிடம் டிமாண்டி காலனி 3 படத்தின் கதையைச் சொல்லி முடிவானதும் கதையின் தரத்தில் எந்தவிதமான சமரசமும் இருக்கக் கூடாது அதற்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவு செய்ய தயார் என்று உறுதியாக கூறினார். டிமாண்டி காலனி படத்தின் பிரான்சைஸூக்கு இப்படியான தயாரிப்பாளர் கிடைப்பது பெரிய அதிர்ஷ்டம்.
படத்தில் பல சவால்கள் இருந்தாலும் அதை எல்லாம் படக்குழுவின் ஆதரவால் எளிதாக கடந்து வர முடிந்தது. மிகவும் திருப்தியாக டிமாண்டி காலனி 3ம் பாகத்தை உருவாக்கியுள்ளோம். நடிகர் அருள்நிதி மிகவும் அர்ப்பணிப்புடன் நடித்துள்ளார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரால் திட்டமிட்டபடி 80 நாட்களுக்குள் படப்பிடிப்பை நிறைவு செய்ய முடிந்தது. டிமாண்டி காலனி பிரான்சைஸ் மொழி மற்றும் எல்லைகளைக் கடந்து பலதரப்பட்ட ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதை மனதில் வைத்து இந்த 3ம் பாகமும் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்த கோடையில் உலகம் முழுவதும் படத்தை ரசிகர்களின் பார்வைக்கு கொண்டுவர ஆவலாக காத்திருக்கிறோம் என்று அஜய் ஞானமுத்து கூறியிருக்கிறார். டிமாண்டி காலனி 3 படத்தில் அருள்நிதி பிரியா பவானி சங்கர் ஆன்ட்டிஜாஸ் கெலைனன் குரு சோமசுந்தரம் ஜி எம் குமார் முத்துக்குமார் ஸ்ரீகுமார் மீனாட்சி கோவிந்தராஜன் அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். சுதன் சுந்தரம், மணிஷ் சிங்லால் துர்காராம் சவுத்ரி ஆகியோர் இந்த படத்தை தயாரித்துள்ளனர். கதையின் களத்திற்கு ஏற்ப போர்ச்சுக்கல் மால்டா லேலடாக் மற்றும் சென்னை உட்பட பல்வேறு உள்நாடுகள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள முக்கிய இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.





