இயக்குனர் கேஎஸ் ரவிக்குமாரிடம் பல படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் ரமேஷ் கண்ணா. அஜீத்குமார் தேவயானி நடித்த தொடரும் என்ற படத்தை கடந்த 1999ம் ஆண்டில் அவர் இயக்கி இருக்கிறார். தெனாலி உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உன்னை நினைத்து பிரண்ட்ஸ் பம்மல் கே சம்பந்தம் பிரியமான தோழி ஆதவன் உள்ளிட்ட பல படங்களில் ரமேஷ் கண்ணா நடித்திருக்கிறார்.
இயக்குனர் விக்ரமன் இயக்கிய உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்தில் நடிகர் கார்த்திக்குடன் படம் முழுவதும் காமெடி ரோலில் நடித்து அறிமுகமானவர் ரமேஷ் கண்ணா. ஆனால் இயக்குனர் ஆர் பாண்டியராஜன் இயக்கத்தில் ஆண்பாவம் படத்தில், பாண்டியன் சீதாவை பெண் பார்க்கும் போது மாப்பிள்ளை மாறி விட்ட தகவலை சொல்லும் சின்ன கேரக்டரில் ரமேஷ் கண்ணா நடித்திருப்பார்.
மீசை முருகேஷிடம், மாப்பிள்ளை வருவது இன்னும் ஒரு மாதம் தள்ளிப் போகும் என்று சொல்லிவிட்டு, பாண்டியனை பார்த்து நான் சொன்ன மாப்பிள்ளை இவர் இல்லே என்று சொல்லி அவரை வெளியே அனுப்பும் காட்சியில் ரமேஷ் கண்ணா நடித்திருப்பார். இதுபோல் பல படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் ரமேஷ் கண்ணா நடித்திருக்கிறார்.
நடிகர் ரஜினியுடன் முத்து படையப்பா படங்களில் ரமேஷ் கண்ணா நடித்திருக்கிறார். இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய இந்த படங்களில் ரமேஷ் கண்ணா உதவி இயக்குனராகவும் பணிசெய்திருக்கிறார். இந்நிலையில் ரஜினிகாந்த் குறித்து ரமேஷ் கண்ணா வெளிப்படையாக விமர்சித்து பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் குறித்து ஒரு நேர்காணலில் நடிகர் மற்றும் இயக்குனர் ரமேஷ் கண்ணா கூறியதாவது, விஜய் சினிமாவில் நடிக்கும் போது ரசிகர் மன்றம் மூலமாக மக்களுக்கு நல்லது செய்தார். பல நலத்திட்ட உதவிகளை அவர் தனது மன்றங்கள் வாயிலாக வழங்கினார். அப்போது அவர் அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை.
ஆனால் ரஜினிகாந்த் கடந்த 30 ஆண்டுகளாக அரசியலுக்கு வருவேன் வருவேன் என்று சொல்லி சொல்லி ரசிகர்களை நம்ப வைத்து விட்டு கடைசியில் பின்வாங்கினார். ஆனால் விஜய் திடீரென கட்சியை ஆரம்பித்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளார் என்று கூறியிருக்கிறார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று நம்பியே ஏமாந்த ரசிகர்களுக்கு, அப்படிப்பட்ட ஒரு ஏமாற்றத்தை விஜய் தரவில்லை என்றும் ரமேஷ் கண்ணா வெளிப்படையாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.





