சினிமா இயக்குனர் நடிகர் மற்றும் தயாரிப்பாளராக உள்ள சுந்தர் சி இப்போது தேர்தல் களத்தில் அரசியல்வாதியாக குதித்து விட்டார். அதிமுக பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏசி சண்முகம், தனது நெருங்கிய நண்பரான சுந்தர் சிக்கு மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் அரிய வாய்ப்பை தந்துள்ளார்.
மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சுந்தர் சி, மதுரையில் சொந்த வீடு பார்த்து விட்டதாகவும் இனி மாதத்தில் 15 நாட்கள் மதுரையில்தான் நான் வசிப்பேன். இனிமேல் என்னை யாரும் வெளியூர்க்காரன் என்று பழமைவாதம் பேசக்கூடாது. நானும் மதுரைக்காரன்தான் என்று சுந்தர் சி நேற்று செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.
ஏற்கனவே சுந்தர் சியின் மனைவி நடிகை குஷ்பு திமுக காங்கிரஸ் கட்சிகளில் இருந்தவர். இப்போது பாஜக கட்சியில் இருந்து வருகிறார். மேலும் பாஜகவின் மாநில துணைத் தலைவராகவும் உள்ள நிலையில் மதுரை மத்திய தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் தனது கணவர் சுந்தர் சி ஆதரவாக தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி வேட்பு மனுதாக்கல் செய்த போது தனது சொத்துகள் விவரங்களையும் அதில் தெரிவித்துள்ளார். அதன்படி இயக்குனர் சுந்தர் சி பெயரில் 2.97 கோடி ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துக்கள், 2.97 கோடி ரூபாய் அசையாத சொத்துகள், அவரது மனைவி குஷ்பு பெயரில் 6.6 கோடி ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துக்களும், 4.17 கோடி ரூபாய் அசையாத சொத்துகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுந்தர் சி கையில் ரொக்கமாக 50 ஆயிரம் ரூபாய், குஷ்புவிடம் 30 ஆயிரம் ரூபாய் உள்ளதாக தெரிவித்துள்ளார். சுந்தர் சியிடம் மனை நிலங்களாக 3 இடங்களும் குஷ்புவிடம் மனை நிலங்களாக 6 இடங்களும் உள்ளன. சுந்தர்சி யிடம் அசையா சொத்துக்கள் மதிப்பு 20.82 கோடி ரூபாய், குஷ்புவிடம் அசையா சொத்துக்கள் 16.79 கோடி இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் சுந்தர் சிக்கு சொந்தமாக 3 கார்களும் குஷ்புவுக்கு சொந்தமாக ஒரு காரும் உள்ளது.
குஷ்புவிடம் 4.80 கோடி மதிப்பிலான 3.5 கிலோ தங்கம், ரூ. 60 லட்சம் மதிப்பிலான 24 கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளது. சுந்தர் சியிடம் 220 கிராம் தங்கம் உள்ளது. மேலும் சுந்தர் சிக்கு 4.12 கோடி ரூபாய் கடனும் குஷ்புவுக்கு 2.74 கோடி ரூபாய் கடன்களும் உள்ளது. சென்னையில் 8 வீடுகள் உட்பட ஊட்டி கொடைக்கானலில் இவர்களுக்கு சொந்தமான பங்களாக்கள் என மொத்தம் 10 பங்களா வீடுகள் உள்ளன என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





