- Advertisement -
Homeபொழுதுபோக்குபாகுபலி நாயகி அனுஷ்காவுக்கு காதி படம் கம்பேக் கொடுக்குமா? 2 படங்களை மலையாக நம்பும் அவருக்கு...

பாகுபலி நாயகி அனுஷ்காவுக்கு காதி படம் கம்பேக் கொடுக்குமா? 2 படங்களை மலையாக நம்பும் அவருக்கு திருப்புமுனை வெற்றி கிடைக்குமா?

- Advertisement -

சினிமாவை பொருத்த வரை தொடர் வெற்றிகளை கொடுத்தால் மட்டுமே பீல்டில் நிலைத்து நிற்க முடியும். பல ஆண்டுகளாக பல வெற்றிப் படங்களை கொடுத்திருந்தாலும் ஒன்று அல்லது இரண்டு தோல்வி படங்களை தந்துவிட்டால் அவ்வளவுதான். பிறகு மீண்டும் பழைய இடத்தை பிடிக்க முடியாது. பழைய மார்க்கெட் இமேஜ் சினிமா வட்டாரத்தில் கிடைக்காது.

அதற்கு சமீபத்திய உதாரணமாக இயக்குனர் ஷங்கரை சொல்லலாம். கடந்த 30 ஆண்டுகளில் அவர் 15 படங்களை மட்டுமே இயக்கி இருக்கிறார். இதில் 10க்கும் மேற்பட்ட படங்கள் மாஸ் ஹிட் படங்களாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டவை. ஆனால் கடைசியாக ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 கேம் சேஞ்சர் படங்களின் தோல்வியால் ஷங்கர் மீதான இமேஜ் டேமேஜ் ஆகி விட்டது.

இது இயக்குனர்களுக்கு மட்டுமல்ல, நடிகர் நடிகைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் அனுஷ்கா. அருந்ததி பாகுபலி வேட்டைக்காரன் சிங்கம் அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தவர். ஆனால் ஒரு கட்டத்தில் உடல் பருமன் ஆனதால் பட வாய்ப்புகளே இல்லாமல் போய்விட்டது.

இதற்கிடையே சில படங்களில் நடிகை அனுஷ்கா நடித்தார். கடைசியாக அனுஷ்கா நடிப்பில் வெளிவந்த மிஸ்ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி. இந்த படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இப்போது அனுஷ்கா காதி என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி வெளியாகிறது. வழக்கமான கதாநாயகியாக இல்லாமல் ஆக்சன் கதையில் காதி படத்தில் அனுஷ்கா நடித்திருக்கிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியானது. நடிகை அனுஷ்காவின் ஆவேசமான சண்டைக் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று இருக்கிறது. இந்திய அளவில் பெரிய நட்சத்திர நடிகையாக வலம் வரும் அளவுக்கு அழகும் நடிப்பும் திறமையும் கொண்ட நடிகை அனுஷ்கா துரதிஷ்டவசமாக தனது உடல் பருமனால் கடந்த சில ஆண்டுகளாக நடிக்க முடியாமல் போய்விட்டது.

விரைவில் வெளிவர உள்ள காதி படம் அவருக்கு சிறந்த கம்பேக் படமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். காதி படத்தை தொடர்ந்து கத்தனார் என்கிற திரில்லர் படத்திலும் அனுஷ்கா நடித்து வருகிறார். இந்த 2 படங்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றால் மட்டுமே அவருக்கு தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும். அவரை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்களும் முன்வருவார்கள். அதனால் காதி படம் மிகப்பெரிய வெற்றியை பெறுமா என்று எதிர்பார்ப்பில் நடிகை அனுஷ்கா காத்திருக்கிறார்.

சற்று முன்