- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபல டிவி தொடரில் நடித்து வந்த நடிகை எடுத்த அவசர முடிவு - வீடியோ காலில்...

பிரபல டிவி தொடரில் நடித்து வந்த நடிகை எடுத்த அவசர முடிவு – வீடியோ காலில் பேசியதால் ஏற்பட்ட விபரீதம் – போலீசார் விசாரணை!

- Advertisement -

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடர் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற தொடராக இருந்து வருகிறது. இந்த தொடரில் நடித்து வந்த பிரபல நடிகை குடும்ப பிரச்னையால் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கையைச் சேர்ந்தவர் நடிகை சுபாஷினி. இவரது இயற்பெயர் சாஷ்வி பாலா. வயது 36. சென்னை ஐயப்பன்தாங்கலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் சுபாஷினி வசித்து வந்தார். அவரது கணவர் பிப்பின் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணி செய்து வருகிறார். கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சுபாஷினிக்கும் பிப்பினுக்கும் திருமணம் நடந்துள்ளது. சுபாஷினி சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

- Advertisement -

பெங்களூருவில் தங்கியிருந்த சுபாஷினி கயல் தொடரில் நடிக்கிறார். அதனால் கயல் படப்பிடிப்பு காரணமாக கடந்த 3ம் தேதி சென்னைக்கு அவர் வந்துள்ளார். நேற்று கணவருடன் வீடியோ காலில் பேசும்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் மன உளைச்சலுக்கு ஆளான சுபாஷினி, கணவர் வீடியோ காலில் இருக்கும்போதே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

உடனடியாக சுபாஷ்னியின் கணவர் பிப்பின், காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் வந்து சுபாஷ்னியின் உடலை மீட்டு தற்போது கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ உடல் பரிசோதனக்காக வைத்திருக்கின்றனர். சுபாஷினியின் தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

- Advertisement -

இந்த சம்பவம் சின்னத்திரை நடிகர் நடிகைகள் மற்றும் ரசிகர்களிலேயே பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படி சினிமா நடிகர் நடிகைகள் சீரியல் நடிகைகள் திடீரென அவசர முடிவை எடுப்பது ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிவி சீரியலில் நல்ல கேரக்டரில் துணிச்சலான பெண்களாக நடிக்கும் நடிகைகள், சொந்த வாழ்க்கையில் பிரச்னைகள் வரும்போது அதை எதிர்த்து நின்று ஜெயிக்காமல் அவசரமான தவறான முடிவை எடுப்பது ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது. இதுபோன்ற மன உளைச்சலில் இருக்கும் பெண்கள் தவறான முடிவுகளை எடுக்காமல் தடுக்க தமிழக அரசின் 104 எண்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். சினேகா ஹெல்ப் லைன் 044 24640050 என்ற எண்களில் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்