தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகராக வலம் வந்தவர் விஜய். ஆனால் கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கிய அவர் இப்போது தமிழக அரசியல் களத்தில் ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் அளவுக்கு தீவிர அரசியல்வாதியாக மாறியிருக்கிறார்.
நடிகர் விஜய்க்கு தியேட்டர்களில் எப்படி ரசிகர்கள் கூட்டம் அலைமோதியதோ அதை விட பலமடங்கு அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அலைகடல் என திரண்டு வருகிறது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி புதுச்சேரியிலும் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் வழிநெடுகிலும் விஜய்க்கு திரண்டிருந்தது.
திமுக காங்கிரஸ் கட்சி கூட்டணிகள் ஒருபுறம், அதிமுக பாஜக கூட்டணி கட்சிகள் மறுபுறம், இடையில் சீமானின் நாம் தமிழர் கட்சி என மும்முனை போட்டிகளுக்கு மத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் அரசியல் நுழைவுதான் பெரிய அளவில் அரசியல் களத்தில் எதிர்பார்ப்பை ஆர்வத்தை கிளப்பியிருக்கிறது.
இதில் 234 தொகுதிகளிலும் தனித்து களம் காணும் தவெக வேட்பாளர்கள் விஜய் என்ற ஒற்றை மந்திரத்தை சொல்லி தான் ஓட்டு கேட்டு வருகின்றனர். திமுகவும் வேண்டாம் அதிமுகவும் வேண்டாம். புதிய மாற்றம் அரசியல் களத்தில் வர வேண்டும் என்று வெளிப்படையாக கூறும் பெரும்பாலான மக்கள் இந்த முறை விஜய்க்கு தான் டிவிகேவுக்கு தான் விசிலுக்கு தான் எங்கள் ஓட்டு என்றும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கூறியதாவது, விஜய் அரசியலுக்கு வருவார் என்று எனக்கு முன்கூட்டியே தெரியும். வேட்டைக்காரன் படத்தில் பணியாற்றிய போது அவர் சொந்த செலவில் வீடு இல்லாமல் இருந்த பலருக்கு வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணம் அவரிடம் இருக்கிறது. அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாமே என்று விஜய் ஆண்டனி கூறியிருக்கிறார்.
இதே போல் இசைப்புயல் ஏஆர் ரகுமான் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், தமிழ்நாட்டில் ஒரு தமிழன் தான் ஆளணும். உண்மையான தமிழன் என்றும் மக்களை ஏமாற்ற நினைக்க மாட்டான். தமிழ் மக்களின் நலனுக்காக போராடுவான். இப்போது அரசியல் களத்தில் ஒரு நம்பிக்கை நாயகன் உருவாகி இருக்கிறார். நிச்சயமாக அந்த தமிழன் கையால் மக்களுக்கு நல்லாட்சி கிடைக்கும் என்று நம்புகிறேன் என்று ஏஆர் ரகுமான் உறுதியாக கூறியிருக்கிறார்.





