- Advertisement -
Homeபொழுதுபோக்குஒரு வழியாக முடிவுக்கு வந்த அரசன் படம் பஞ்சாயத்து - அதற்குள் வெற்றிமாறன் இப்படி செஞ்சுட்டாரே?...

ஒரு வழியாக முடிவுக்கு வந்த அரசன் படம் பஞ்சாயத்து – அதற்குள் வெற்றிமாறன் இப்படி செஞ்சுட்டாரே? – குழப்பத்தில் ரசிகர்கள்!

- Advertisement -

கலைப்புலி தாணு தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு அரசன் என்ற படத்தில் நடித்து வந்தார். அந்த படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் செட் அமைத்து நடந்து வந்தது. தயாரிப்பாளர் ஐசரி கணேஷிடம் நடிகர் சிம்பு படத்தில் நடிக்க கமிட் ஆகி வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பி தராத பஞ்சாயத்து நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.

அந்த விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கமும் பெப்ஸி அமைப்பும் முட்டுக்கட்டை போட்டதால் அரசன் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டது. மேலும் நடிகர் சிம்பு நடிக்க இருந்த விளம்பர படமும் நடிக்க முடியாமல் போனது. விளம்பர படத்தால் ரூ. 3.5 கோடி வரை சிம்புவுக்கு இழப்பும் ஏற்பட்டது.

- Advertisement -

இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் பெப்ஸி அமைப்பு நடிகர் சங்கம் மற்றும் சிம்பு தரப்பில் அவரது தாயார் உஷா ராஜேந்தர் உள்ளிட்டோர் பங்கேற்ற ஒரு பஞ்சாயத்து கூட்டம் நடந்துள்ளது. இதில் ஒரு வழியாக பேசி தீர்வு காணப்பட்டுள்ளது. இதில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தரப்பில் அவரது நிறுவன சிஇஓவான நடிகர் அருண் பாண்டியன் கலந்து கொண்டுள்ளார்.

இந்த பஞ்சாயத்தில் முடிவாக சிம்பு தரப்பில் ஐசரி கணேஷூக்கு 4 கோடி ரூபாய், தயாரிப்பாளர் தாணு தரப்பில் 2.5 கோடி ரூபாய் என மொத்தம் 6.5 கோடி ரூபாய் தருவதாக பேசி முடிக்கப்பட்டுள்ளது. அதனால் அரசன் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் மீண்டும் துவங்கி நடக்க உள்ளது. விளம்பர படத்தில் நடிக்கும் சிம்பு 3 நாட்களுக்கு பிறகு அரசன் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார்.

- Advertisement -

ஆனால் இப்படிப்பட்ட ஒரு சூழலில், எப்படியும் ஐசரி கணேஷ் சிம்பு பஞ்சாயத்து மாதக்கணக்கில் இழுக்கும். அதனால் நிறுத்தப்பட்டுள்ள அரசன் படப்பிடிப்பை இப்போது துவங்க வாய்ப்பே இல்லை என்று தப்புக்கணக்கு போட்ட இயக்குனர் வெற்றிமாறன், அரசன் படத்துக்காக போட்டிருந்த செட்டில் ராஜன் வகையறா படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார்.

இந்த செட்டில் நடிகர் கென் கருணாஸ் நடிக்கும் காட்சிகளை வெற்றிமாறன் படமாக்கி வருகிறார். இதையறிந்த அரசன் படக்குழுவினர் மற்றும் நடிகர் சிம்பு போன்றவர்கள் பலத்த அதிர்ச்சியடைந்துள்ளனர். ராஜன் வகையறா படம், வடசென்னை படத்தின் கிளை கதை என்பதால் அரசன் படத்துக்காக போடப்பட்ட ஷெட்டில் ராஜன் வகையறா காட்சிகளை அவர் படமாக்கியதாக தெரிய வந்துள்ளது. அதற்குள் இவ்வளவு அவசரமா என வெற்றிமாறனை சிம்பு ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்