நடிகர் அஜீத்குமார் தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். ஆனால் அவர் திரைப்படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டாமல் கார் ரேஸ் பைக் ரேஸ் ரைபிள் சுடுதல் என விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். மாதக்கணக்கில் முதலில் இதற்காக நேரம் ஒதுக்கிய அவர், இப்போது ஆண்டுக்கணக்கில் கார் ரேஸ்க்கு நேரம் ஒதுக்கி வருகிறார்.
2023ம் ஆண்டில் வெளியான வலிமை துணிவு படங்களுக்கு பிறகு 2 ஆண்டுகள் கழிந்து 2025ம் ஆண்டில் விடாமுயற்சி குட்பேட் அக்லி படங்கள் வெளியானது. இந்த படங்கள் வெளியாகி ஓராண்டு கழித்தும் இன்னும் தனது 64வது படத்தில் நடிக்காமல் அஜீத்குமார் ஆண்டு முழுவதும் கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார்.
நடிகர் விஜயும் அரசியல் தலைவராகி விட்டதால் அஜீத்குமாருக்கு சினிமாவில் போட்டியாளர் இல்லை. அதனால் அஜீத்குமாருக்கு சினிமாவில் பெரிய இமேஜ் மார்க்கெட் இல்லை. தியேட்டரிக்கல் நான் தியேட்டரிக்கல் என அவரது படங்களுக்கு வியாபாரம் எதுவும் இப்போது இல்லை என தமிழ் சினிமாவின் முக்கிய புள்ளிகளில் ஒருவரான திருப்பூர் சுப்ரமணியன் ஏற்கனவே வெளிப்படையாக கூறியதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் நடிகர் அஜீத்குமார் தனது சம்பளம் என ஒரு படத்துக்கு ரூ. 185 கோடி கேட்கிறார். அத்துடன் படத்தின் பட்ஜெட் என ரூ. 300 கோடி முதல் ரூ. 350 கோடி வரை தயாரிப்பாளர் முதலீடு செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆனால் அவ்வளவு பெரிய பட்ஜெட்டில் அஜீத் படம் எடுத்தால் தயாரிப்பாளர் பலத்த நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்பதுதான் கசப்பான உண்மை.
அதனால் அஜீத் படத்தை தயாரிக்க தமிழ் தெலுங்கு என எந்த பெரிய தயாரிப்பாளரும் முன்வராத நிலையில் சமீபத்தில் ஒரு தெலுங்கு தயாரிப்பாளர் அஜீத்குமார் படத்தை தயாரிக்க முன்வந்து அவரை சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது அஜீத்குமாரிடம் கால்ஷீட் தேதிகளை ஒதுக்கி தருமாறும் கேட்டிருக்கிறார்.
அதற்கு அஜீத்குமார், ஒரு மாதத்தில் 10 நாள், ஒரு மாதத்தில் 5 நாள், ஒரு மாதத்தில் 15 நாள் என மாதந்தோறும் 5 அல்லது 10 அல்லது 15 என கால்ஷீட் தேதிகளை ஒதுக்கி தந்திருக்கிறார். இப்படி துண்டு துண்டாக கால்ஷீட் தேதி தந்தால் எப்போது நான் படத்தை தயாரித்து முடிப்பது? எப்படி படத்தை திட்டமிட்டு தயாரிக்க முடியும் என்று புலம்பி விட்டு, தெரியாமல் இந்த பக்கமாக வந்துட்டேன். ஆளை விடுங்கடா சாமி என்று அலறியபடி தலைதெறிக்க ஓடியிருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.





