இயக்குனர் ஹரி தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். குறிப்பாக அவரது இயக்கத்தில் வெளியான கோவில் சாமி ஐயா சிங்கம் சிங்கம் 2 தாமிரபரணி பூஜை அருள் ஆறு வேல் வேங்கை சேவல் போன்ற படங்கள் பெரிய வெற்றிப் படங்களாக இருந்திருக்கின்றன. மேலும் அவரது படங்கள் குடும்ப படங்களாகவும் பேமிலி ஆடியன்ஸ் விரும்புகிற படங்களாகவும் உள்ளன.
கடந்த 2002ம் ஆண்டில் ஹரி தமிழ் என்ற படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் நாயகனாக பிரசாந்த் நாயகியாக சிம்ரன் நடித்திருந்தனர். மேலும் வடிவேலு ஊர்வசி மனோரமா உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்திருந்தனர். இவர் நடிகர் விஜயகுமாரின் மகள் ப்ரீத்தா விஜயகுமாரின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இயக்குனர் ஹரி இயக்கத்தில் கடைசியாக வெளியான அருண்விஜய் நடித்த யானை படமும் விஷால் பிரியா பவானி சங்கர் நடித்த ரத்னம் படமும் பெரிய பிளாப் படங்களாக இருந்தன. ஒரு கட்டத்தில் அதிரடியான விறுவிறுப்பான படங்களை தந்த ஹரி இயக்கிய இந்த படங்கள் ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்தன.
இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் பிரசாந்த் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி தந்த படம் அந்தகன். அந்த படத்தின் பெரிய வெற்றிக்கு பிறகு ஹரி இயக்கத்தில் பிரசாந்த் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆனார். அந்த படத்தை பிரசாந்தின் அப்பா நடிகர் தியாகராஜன் தயாரிக்கவும் முன்வந்த நிலையில் இந்த படத்தின் துவக்க விழா நடந்தது.
ஆனால் இந்த படத்துக்காக இயக்குனர் ஹரி, நடிகர் பிரசாந்தின் உடல் எடையை கணிசமாக குறைக்கச் சொன்னார். ஆனால் பிரசாந்த் உடல் எடையை குறைக்கவே இல்லை. அதனால் இந்த படம் டிராப் ஆனது. இதற்காக வாங்கிய அட்வான்ஸ் தொகை, ப்ரீ புரடக்சன்ஸ் பணிக்கான செலவுகளை இயக்குனர் ஹரி தர வேண்டும் என்று பிரசாந்த் தரப்பு, புரடியூசர் கவுன்சிலில் புகார் அளித்துள்ளது.
இதற்கிடையே இயக்குனர் ஹரி, பிரசாந்த் நடிக்க வேண்டிய கதையில் நாயகனாக நடிகர் அதர்வாவை நடிக்க வைக்க கமிட் செய்திருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளது. விரைவில் பிரசாந்த் நடிக்க வேண்டிய கதையில் அதர்வா நடிக்க அந்த படத்தை இயக்குனர் ஹரி டைரக்ட் செய்ய இருக்கிறார்.





