- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு - 85 சதவீதமாக அதிகரிக்க தவெக தலைவர் நடிகர் விஜய்தான்...

தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு – 85 சதவீதமாக அதிகரிக்க தவெக தலைவர் நடிகர் விஜய்தான் காரணமா? அவர் போட்டியிட்ட 2 தொகுதிகளில் நிலவரம்!

- Advertisement -

இந்திய தேர்தல் ஆணையம் நடத்திய தமிழக சட்டசபை தேர்தல் நேற்று அமைதியாக நடந்த முடிந்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 5,67,07,380 வாக்காளர்கள் என்ற நிலையில் ஆண் வாக்காளர்கள்2,77,38,925 பெண் வாக்காளர்கள் 2,89,60,838 என்ற எண்ணிக்கையில் உள்ளது. அடுத்து மூன்றாம் பாலினத்தவர் 7,617 பேர் உள்ளனர். காலை 7 மணி துவங்கி மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 1.40 லட்சம் போலீசார், 300 துணை ராணுவ படை கம்பெனிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நேற்று காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை நீடித்த இந்த தேர்தலில் மொத்தம் 85 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. இதுவரை தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 78 சதவீதம் வாக்குகளே பதிவான நிலையில் இந்த முறை 7 சதவீதம் வாக்குகள் அதிகரித்துள்ளன. பெரும்பாலான தொகுதிகளில் 90 முதல் 92 சதவீதம் வரை வாக்குகள் பதிவாகி இருந்தன. காலை முதல் மாலை வரை மணிக்கணக்கில் மக்கள் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

- Advertisement -

இப்படி இந்த தேர்தலில் கணிசமாக வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்க நடிகர் விஜய்தான் காரணம். அவரது தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியின் எழுச்சிதான் காரணம் என்று பரவலாக இணையத்தில் பலரும் பேசி வருகின்றனர். நடிகர் விஜய் மட்டுமே தனது பிரசாரத்தில் காலை 7 மணிக்கே பக்காவாக கிளம்பிச் சென்று ஓட்டுப் போடுங்கள் என்று மக்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் வெளிநாட்டில் இருப்பவர்கள் எல்லாம் தயவு செய்து தமிழ்நாட்டுக்கு வந்து உங்கள் ஓட்டை போடுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார். இப்படி பலமுறை அவர் அழுத்தம் திருத்தமாக தனது பிரசார கூட்டங்களில் வலியுறுத்தியது முக்கிய காரணமாக உள்ளது. இப்படி எந்த ஒரு அரசியல்வாதியும் மக்களுக்கு அறிவுரை செய்து ஓட்டுப் போட அழைத்தது இல்லை.

- Advertisement -

அதுமட்டுமின்றி திமுக அதிமுக என்ற 2 திராவிட கட்சிகளே மாறி மாறி ஆட்சி செய்து வரும் நிலையில் இந்த 2 கட்சிகளும் இல்லாமல் தமிழக ஆட்சியில் மாற்றம் வேண்டும் என்று மக்கள் கருதியதும் தேர்தல் ஓட்டுப்பதிவு அதிகரிக்க காரணம் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அதனால் அந்த விஷயத்திலும் தவெக கட்சி ஒரு மாற்று அரசியல் இயக்கமாக உருவெடுத்துள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையே நடிகர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் வேட்பாளராக போட்டியிட்டார். அவர் பெரம்பூர் தொகுதியில் 89.71 சதவீதம் ஓட்டுகள் நேற்று பதிவானது. அதே போல் திருச்சி கிழக்கு தொகுதியில் மொத்தம் 81.77 சதவீதம் ஓட்டுகளும் பதிவாகி உள்ளது. கடந்த 2021 தேர்தலை காட்டிலும் இந்த முறை அதிக சதவீத ஓட்டுகள் இந்த 2 தொகுதிகளிலும் பதிவாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்