நடிகர் கமல்ஹாசன் பிராமணர் குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தும் கடவுள் மறுப்பாளராக ஆரம்பத்தில் இருந்தே பகுத்தறிவு பேசி வருகிறார். தசாவதாரம் படத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் கூட கடவுள் இல்லை என்று எங்கே நான் சொன்னேன்? இருந்தால் நல்லா இருக்கும் என்றுதானே சொல்கிறேன் என்று பேசியிருப்பார்.
அதேபோல் அவரது மகள்கள் ஸ்ருதிஹாசன் அக்சராஹாசன் இருவரும் கூட அப்பா கமலை போலவே தான் இதுவரை காணப்பட்டனர். அவர்கள் முக்கியமான கோவில்களுக்கு ஆன்மிக தலங்களுக்கு சென்றதாக இதுவரை புகைப்படங்களோ வீடியோக்களோ வெளியானது இல்லை. அவர்களும் கடவுள் மறுப்பாளர்களாக தான் இதுவரை காணப்பட்டனர்.
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகை ஸ்ருதிஹாசன் கூறியதாவது, என் வாழ்க்கையில் சமீபத்தில் தான் வாராஹி அம்மன் வந்தாங்க. ஏன்னா நம்ம மட்டும் இல்ல கடவுள்களும் நம்மை தேர்ந்தெடுக்குறாங்கன்னு நான் நம்புகிறேன்.
சென்னையில் இருக்கிற என் நண்பன் பத்ரி மூலமாக தான் அது நடந்தது. அவன்தான் சொன்னான். நீ கொஞ்சம் வித்தியாசமா இருக்கே? வா கோயிலுக்கு போலாம்ன்னு என்னை கூட்டிட்டு போனான். அது ஒரு சின்ன கோயில்தான். ஆனால் ரொம்ப அழகா இருக்கும்.
அங்கே கோவிலுக்கு உள்ளே போன உடனே உண்மையான ஒரு பக்தியை உணர்ந்தேன். சின்ன கோவில்தான். ஆடம்பரம் இருக்காது. நன்கொடை இல்லை. விஐபி வரிசை என்று எதுவும் இல்லை. உண்மையிலேயே என் வாழ்க்கையில் வாராஹி அம்மன் சக்தி வாய்ந்த ஒரு தெய்வமாய் இருக்காங்க என்று நடிகை ஸ்ருதிஹாசன் அதில் கூறியிருக்கிறார்.
எங்கு சென்றாலும் கருப்பு நிற உடையணிவதில் அதிக ஆர்வம் காட்டும் நடிகை ஸ்ருதிஹாசன், 40 வயதுகளை கடந்தும் திருமணம் செய்யாமல் முரட்டு சிங்கிளாக இருந்து வருகிறார். நிறைய காதல் பிரேக்கப்களையும் அவர் சந்தித்து விட்டார். இந்த சூழலில் தந்தை வழியில் பகுத்தறிவாளராக காணப்பட்ட ஸ்ருதிஹாசன் வாராஹி அம்மன் சுவாமி பக்தையாக மாறியிருப்பதாக கூறியிருப்பது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.





