- Advertisement -
Homeபொழுதுபோக்குமிரட்டறீங்களா? பூச்சாண்டி காட்டற வேலை வேண்டாம்… தில்லா கெத்தா நேர்மையா வாங்க, எலக்‌ஷனில் சந்திப்போம் -...

மிரட்டறீங்களா? பூச்சாண்டி காட்டற வேலை வேண்டாம்… தில்லா கெத்தா நேர்மையா வாங்க, எலக்‌ஷனில் சந்திப்போம் – திமுகவுக்கு பகிரங்க சவால் விட்ட தளபதி!

- Advertisement -

தமிழகம் முழுவதும் வரும் டிசம்பர் 20ம் தேதி வரை மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொள்ள தவெக தலைவர் நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளார். கடந்த வாரம் திருச்சி அரியலூரில் மக்களை சந்தித்த நடிகர் விஜய் 2வது வாரமான இன்று நாகையில் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொண்டார். சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த அவர், காரில் நாகை மாவட்டத்துக்கு வருகை வந்தார்.

நாகையில் புத்தூர் அண்ணா சிலை அருகில், மக்கள் கூட்டத்தில் நடிகர் விஜய் பேசியதாவது, நான் பிரச்சாரம் செய்ய பல கட்டுப்பாடுகளை நிபந்தனைகளை விதிக்கின்றனர். அந்த காரணங்கள் எல்லாம் ரொம்பவும் சொத்தையாக இருக்கிறது. காமெடியாக இருக்கிறது. பஸ்சை விட்டு வெளியே வராதே மக்களை பார்த்து சிரிக்காதே கையசைக்காதே என்றெல்லாம் சொல்கிறார்கள். கேட்கவே செம காமெடியா இருக்கிறது.

- Advertisement -

என்னை 5 நிமிடம் 10 நிமிடம் மட்டுமே பேச சொல்கிறார்கள். நான் பேசப்போவதே 3 நிமிடங்கள் தான். அதற்கும் தடை போட்டால் என்ன செய்வது? அதை பேசாதே இதை பேசாதே என்று சொன்னால் எப்படி நான் எதைத்தான் பேசுவது? நான் அரியலூரில் பேசச் சென்றபோது பவர் கட் செய்து விட்டனர். திருச்சியில் பேச ஆரம்பித்தபோது ஸ்பீக்கருக்கு சென்ற ஒயர் கட்டாகி விட்டது. பிரதமர் மோடி அல்லது ஆர்எஸ்எஸ் தலைவர் அல்லது உள்துறை அமைச்சர் வந்தால் இந்த மாதிரி கண்டிஷன் போடுவீர்களா? பவர் கட் வயர் கட் பண்ணுவீங்களா? செய்தால் பேஸ்மென்ட் அதிரும்லே. ஆனால் நீங்கதான் அவர்களுடன் மறைமுக உறவுக்காரர்கள் ஆச்சே சிஎம் சார்?

என்ன மிரட்டி பாக்கறீங்களா? அதுக்கு விஜய் ஆளில்லை. என்ன செய்து விடுவீர்கள்? கொள்கையை பெயருக்கு வைத்துக் கொண்டு குடும்பத்துடன் சேர்த்து கொள்ளையடிக்கும் உங்களுக்கே இவ்வளவு இருந்தால் சொந்தமாக உழைத்து சம்பாதித்த எனக்கு எவ்வளவு இருக்கும்? எனது கூட்டங்களுக்கு மக்கள் நெருக்கடியாக நின்று கேட்கும் இடங்களை ஒதுக்குகிறீர்கள். உங்கள் எண்ணம் தான் என்ன சார்? நான் ஒரு அரசியல் தலைவன் என்பதை மறந்துவிடுங்கள். இந்த நாட்டின் தமிழ் மகனாக என் மக்களை என் சொந்தங்களை நான் சந்திக்க சென்றால் என்ன செய்வீர்கள்?

- Advertisement -

அப்பவும் தடை போடுவீர்களா? வேண்டாம் சார். அடக்குமுறை அரசியல் அராஜகம் வேண்டாம் சார். நான் தனி ஆள் இல்லை சார். நான் மாபெரும் மக்கள் சக்தியின் பிரதிநிதி. மாபெரும் பெண்கள் சக்தியின் சகோதரன். மாபெரும் இளைஞர் இயக்கமாக இருக்கிறோம். 2026ம் ஆணடில் ரெண்டே ரெண்டு பேருக்குதான் போட்டி. ஒன்று தவெக மற்றொன்று திமுக. இந்த பூச்சாண்டி காட்டுவதையெல்லாம் விட்டுவிட்டு நீங்க தில்லா கெத்தா நேர்மையா எலக்சனை சந்திக்க வாங்க, பார்த்துக்கலாம்.

கொள்கையை பெயருக்கு வைத்துக் கொண்டு குடும்பத்தின் கூட்டணியோடு கொள்ளை அடிக்கும் நீங்களா? இல்லை தமிழகத்தின் ஒவ்வொரு வீடுகளில் இருக்கும் நானா என்று பார்த்துவிடலாம். இனிமேல் எனக்கு தடை போட்டால் நான் மக்களிடமே அனுமதி கேட்டுக் கொள்வேன். எனக்கு தடைபோடும் திமுக ஆட்சி வரவேண்டுமா? உங்களுக்கு நல்லது செய்ய வந்துள்ள நான் ஆட்சிக்கு வர வேண்டுமா? கேட்டதா மை டியர் சார்? இந்த போர் முழக்கம் இனி உங்களை ஒரு நிமிடம் கூட தூங்க விடாது, துரத்திக் கொண்டே இருக்கும். வெற்றி நிச்சயம். நம்பிக்கையாக இருங்கள். நல்லதே நடக்கும் என்று நடிகர் விஜய் பேசினார்.

- Advertisement -

சற்று முன்