- Advertisement -
Homeபொழுதுபோக்குலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் படம் - சம்பள விஷயத்தில் தயாரிப்பு நிறுவனம்...

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் படம் – சம்பள விஷயத்தில் தயாரிப்பு நிறுவனம் வைத்த செக்!

- Advertisement -

நடிகர் அல்லு அர்ஜூன் தெலுங்கில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். ஆனால் சுகுமாரன் இயக்கத்தில் புஷ்பா புஷ்பா 2 படங்களில் நடித்த பிறகு அவர் பான் இந்தியா நடிகராக மாறிவிட்டார். இப்போது அட்லி இயக்கத்தில் அவர் தனது 22வது படத்தில் நடித்து வருகிறார்.

இது அட்லி இயக்கத்தில் உருவாகும் 6வது படமாகும். இதுவரை அட்லி ராஜா ராணி மெர்சல் பிகில் தெறி மற்றும் இந்தி படம் ஜவான் ஆகிய 5 படங்களை இயக்கி உள்ளார். இப்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அல்லு அர்ஜூன் தீபிகா படுகோனே நடிப்பில் தனது 6வது படத்தை இயக்கி வருகிறார். இதற்கு ராக்கா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

ஐகான் ஸ்டார் நடிகர் அல்லு அர்ஜூன் ராக்கா படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். இந்த படத்தை தெலுங்கில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளது.

அட்லி இயக்கத்தில் ராக்கா படத்தில் நடித்துள்ள நடிகர் அல்லு அர்ஜூனுக்கு சம்பளமாக ரூ. 175 கோடி பேசப்பட்டுள்ளது. அதனால் அடுத்து அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் சம்பளம் 300 கோடி ரூபாய் என்றும் ஒரு தகவல் பரவியது. பான் இந்தியா நடிகர்களின் சம்பளம் எல்லாமே இப்படி தாறுமாறாக எகிறி வருகிறது.

- Advertisement -

ஆனால் இப்போது தெலுங்கு சினிமாவில் படத்தின் ஹீரோக்களுக்கு சம்பளம் பேசாமல் குறிப்பிட்ட சதவீதம் பிராபர்டி ஷேர் வழங்கும் முறை நடைமுறையில் உள்ளது. அதாவது படம் வெளியான பிறகு கிடைக்கும் லாபத்தில் பங்கு என்ற அடிப்படையில் ஹீரோக்கள் படங்களில் கமிட் செய்யப்படுகின்றனர்.

அந்த முறையில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு 30 சதவீதம் என்ற அளவில் பிராபர்டி ஷேர் தருவதாக ஒப்பந்தம் செய்து இந்த படத்தில் நடிக்க ஒப்புதல் பெற்றுள்ளது. அந்த வகையில் படம் பெரிய ஹிட் ஆனால் 300 கோடி ரூபாய் அவருக்கு கிடைக்கவும் வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் படம் எதிர்பார்த்த அளவுக்கு போகாத பட்சத்தில் வரும் இழப்பையும் ஹீரோ ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்