தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் நடிக்க வந்த போது ஒல்லிப்பிச்சான் நடிகர் என்று உருவக்கேலி செய்யப்பட்டவர்தான் நடிகர் தனுஷ். ஆனால் இப்போது தவிர்க்க முடியாத ஒரு நட்சத்திர நடிகராக அவர் உச்சம் தொட்டிருக்கிறார். அவரை வைத்து படம் இயக்க இயக்குனர்களும் படம் தயாரிக்க தயாரிப்பாளர்களும் காத்திருக்கின்றனர்.
நடிகராக மட்டுமின்றி பாடகர் தயாரிப்பாளர் இயக்குனர் என தமிழ் சினிமாவில் அசத்தி வரும் நடிகர் தனுஷ் நடிப்பில் வரும் 30ம் தேதி கர படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று 16 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. தனுஷூக்கு இது ஒரு வெற்றிப் படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் தனுஷிடம் உள்ள ஒரு வினோத பழக்கம் குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நடிகர் தனுஷ் ஒரு படத்தில் நடிக்கும் போது அந்த படத்தின் இயக்குனருடன் அடிக்கடி தொடர்பில் இருப்பார். போனில் பேசுவார். நினைத்த நேரத்தில் இயக்குனர் தனுஷூடன் பேச முடியும்.
ஆனால் அந்த படத்தில் அவர் நடித்து முடித்து படம் ரிலீஸாகி விட்டால் அதன்பிறகு அந்த இயக்குனர் தொடர்பு கொண்டால் நடிகர் தனுஷ் அவரது நம்பரை எடுக்க மாட்டார். அல்லது தனது நம்பரை மாற்றி விடுவார் என்று தெரிய வந்துள்ளது. ஒரு படத்தை முடித்த பிறகு அந்த இயக்குனருடன் இருந்த தொடர்பை முற்றிலும் வெட்டி விடுவது தனுஷின் பழக்கமாக நீண்ட காலமாக இருந்து வருகிறது.
இப்படி தனுஷ் தன்னுடன் பணிபுரிந்த இயக்குனரின் தொடர்பை அந்த படம் வெளியானவுடன் துண்டித்து விடுவதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. அதே நேரத்தில் அந்த இயக்குனருடன் பணிபுரியும் போது தனது பெற்றோர் சகோதரர் சகோதரிகள் உறவினர் நண்பர் போல மிக நெருக்கமாக பழகுவதும் தனுஷின் பழக்கமாக இருந்த வருகிறது.
அப்படி பழகிய பிறகு படம் ரிலீஸான உடன் இயக்குனரின் தொடர்பை தனுஷ் துண்டித்துக் கொள்வதற்கான சரியான காரணம் தெரியவில்லை. அதே நேரத்தில் அவரது ஆஸ்தான இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் மட்டும் தனுஷ் 4 படங்களில் நடித்துள்ள நிலையில் அவருடன் மட்டும் தொடர்பை தொடர்ந்து தனுஷ் நீடிப்பது எப்படி என்பதும் பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.





