திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் தனக்கு சாதி மதம் அற்றவர் சான்றிதழ் வேண்டும் என்று விண்ணப்பித்திருந்த நிலையில் சோழிங்கநல்லூர் தாசில்தார் கடந்து 27ம் தேதி, பார்த்திபன் எந்த சாதியையும் மதத்தையும் சாராதவர் என்று சான்றிதழ் வழங்கினார். இதன்மூலம் சட்டபூர்வமாக நடிகர் பார்த்திபன் சாதி மதம் அடையாளங்களை தவிர்த்துள்ளார்.
தனக்கு இப்படி ஒரு சான்றிதழ் வேண்டும் என்று ஏற்கனவே நடிகர் பார்த்திபன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், நீதிபதி தண்டபாணி முன்பு அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் பார்த்திபனுக்கு சாதி மதம் அற்றவர் என்ற சான்றிதழ் வழங்கப்பட்ட விவரம் கோர்ட்டில் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் இதுகுறித்து நீதிபதி கூறியதாவது, சாதி மதம் அற்றவர் என்பதை நாம்தான் பின்பற்ற வேண்டுமே தவிர சான்றிதழ் அவசியம் இல்லை. விளம்பரத்துக்கு வேண்டுமானால் இந்த சான்று பயன்படும். ஜாதி மதமற்றவர் என்ற சுய பிரகடனம் செய்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. நம் நடத்தை மூலம்தான் அதை காட்ட வேண்டும்.
இதுபோன்ற ஒரு சான்று வழங்க தாசில்தாருக்கும் அதிகாரம் இல்லை. ஏற்கனவே இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலேயே இந்த சான்று வழங்க உத்தரவிடுகிறேன் என்று கூறி வழக்கை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவுப்படி நடிகர் பார்த்திபன் சாதி மதம் அற்றவர் என்ற சான்றிதழை பெற்றுக் கொண்டார்.
அதன்பிறகு நடிகர் பார்த்திபன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, என்னை எல்லோரும் மனநிலை பாதிக்கப்பட்டவன் என்று சொல்கிறார்கள். ஏன் அப்படி சொல்கிறார்கள் என்றால் எனக்கு இந்த சாதி மதம் தேவையில்லை என அப்படி ஒரு சான்றிதழை வாங்கி இருக்கிறேன். அவ்வாறு அதை வாங்கியதால் சில என்னை சிலர் பாராட்டுகிறார்கள். மிகச் சிலர் மனநிலை பாதிக்கப்பட்டவன் என்று சொல்கிறார்கள். ஆனால் இதை வழங்கியது சோழிங்கநல்லூர் தாசில்தார். மாண்புமிகு நீதி அரசர் என்னை பாராட்டி இதை கொடுத்திருக்கிறார்.
இவை அனைத்தையும் செய்தவர்களை மனநலம் பாதிக்கப்பட்டவன் என அவர்கள் யாரை சொல்கிறார்கள்? என்னைப்போல பலர் சாதி மதமற்றவர் சான்றிதழ் வாங்க வேண்டும். என்னை பற்றிய விமர்சனங்கள் தேவையில்லை. நீதிபதியே என்னை பாராட்டும் போது கூட இந்த நாட்டின் நல்லவனாக இருக்கக் கூட ஒரு சான்றிதழ் தேவைப்படுகிறது என்று கூறிதான் இந்த சான்றிதழை வழங்கினார் என்று நடிகர் பார்த்திபன் கூறியிருக்கிறார்.





