தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக ரசிகர்களை மிரட்டியவர் டேனியல் பாலாஜி. குறிப்பாக பொல்லாதவன், வேட்டையாடு விளையாடு படங்களில் வில்லனாக அவரது நடிப்பு வேற லெவலில் இருந்தது. மறைந்த நடிகர் முரளியின் நெருங்கிய உறவினர் டேனியல் பாலாஜி என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் துரதிஷ்டவசமாக இவரும் 48 வயதிலேயே மாரடைப்பால் மறைந்து விட்டார்.
தமிழ் சினிமாவில் நடிகராக பிரபலமான டேனியல் பாலாஜி கோடிக்கணக்கில் செலவு செய்து அரண்மனை போன்ற சொகுசு பங்களா வீட்டை கட்டி அதில் வாழ்ந்து வந்தார். ஆனால் டேனியல் பாலாஜியின் ஆரம்பகால வாழ்க்கை சாதாரணமானது அல்ல. அவர் ஒரு சிறிய குடிசையில் கடும் வறுமையில் வளர்ந்தவர். அவர் திரையுலகில் நுழைந்து 10 ஆண்டுகளில் சுமார் 10 படங்களில் மட்டுமே நடித்து வெற்றியின் உச்சத்தை தொட்டார்.
தனது அம்மாவை மிக வசதியாக வாழ வைக்க வேண்டும் என்ற லட்சியத்தில் அந்த கனவின் விளைவாக தான் சென்னையில் 80 கோடி ரூபாய் மதிப்பில் அந்த மிகப் பிரமாண்டமான பங்களாவை அவர் கட்டி முடித்தார். தமிழ் சினிமாவில் பிரகாசமான எதிர்காலம் கொண்ட ஒரு நடிகராக டேனியல் பாலாஜி. வளர்ந்தார் ஆனால் துரதிஷ்டவசமாக 48 வயதில் டேனியலுக்கு மாரடைப்பு ஏற்பட்டு இந்த உலகை விட்டு மறைந்து விட்டர்.
டேனியல் பாலாஜி மறைவால் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் கண்ணீர் சிந்தியது. தன் மகன் வீட்டை விட்டு சென்ற பிறகு 80 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த ஆடம்பர பங்களாவில் தனிமையில் வசிக்க அவரது தாய்க்கு பிடிக்கவில்லை. அந்த வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் தன் மகனின் நினைவுகள் இருந்த போதிலும் அவரால் அங்கே மன அமைதியை காண முடியவில்லை. அப்போதுதான் அவர் ஒரு அதிரடியான முடிவை எடுத்தார்.
என் மகன் அந்த சின்ன குடிசையில் தான் வளர்ந்தான். அவனது சிறுவயது சிரிப்பு, அவனது குறும்பு, அவன் என்னுடன் பகிர்ந்து கொண்ட வறுமை, இவை அனைத்தும் அந்த குடிசையில் தான் இன்னும் உயிருடன் இருக்கின்றன. எனக்கு இந்த ஏஸி அறைகள் வேண்டாம். இந்த ஆடம்பரமான வாழ்க்கையும் வேண்டாம் என்று கூறிவிட்டு அந்த பழைய குடிசைக்கே திரும்பி சென்று விட்டார். இன்றும் அவர் அதே பழைய குடிசையில் தான் வசிக்கிறார்.
அவர் அங்கே தன் மகனின் புகைப்படத்தை வைத்து அவனது குழந்தை பருவத்தை நினைவு கூர்ந்து தன் நேரத்தை செலவிடுகிறார். நான் இங்கே உறங்கும் போது என் மகன் என் அருகில் இருப்பது போல் உணர்கிறேன். இந்த மண்வாசனையில் என் மகனின் வியர்வை வாசனையை நுகர முடிகிறது என்றும் கண்ணீர் மல்க அவர் கூறுகிறார். 80 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு பங்களா இருந்தும் தன் மகனின் நினைவுகள் நிறைந்த அந்த குடிசைதான் டேனியல் பாலாஜியின் தாய்க்கு சொர்க்கமாக இருக்கிறது.





