- Advertisement -
Homeபொழுதுபோக்குதனுஷ் நடிப்பில் இன்று வெளியான கர படம் எப்படி இருக்குது? மீண்டும் ஒரு பெரிய வெற்றியை...

தனுஷ் நடிப்பில் இன்று வெளியான கர படம் எப்படி இருக்குது? மீண்டும் ஒரு பெரிய வெற்றியை கொடுப்பாரா நடிகர் தனுஷ்?

- Advertisement -

போர்த்தொழில் என்றும் மாபெரும் வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான கர படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸ் ஆகியுள்ளது. கர படத்தின் கதை இதுதான். திருவெறும்பூர் என்ற பகுதியில் இருக்கும் ஒரு எம்எல்ஏ வீட்டில் நாயகன் தனுஷ் கொள்ளையடிக்க செல்கிறார். இவருடன் மைத்துனர் பிருத்வி பாண்டியராஜனும் செல்கிறார்.

தன்னுடைய கடைசி திருட்டு என்று முடிவு செய்து அந்த வீட்டில் தனுஷ் கொள்ளையடிக்கிறார். ஆனால் எதிர்பாராத விதமாக அங்கு தனுஷ் சிக்கிக் கொள்கிறார். பிருத்வி அங்கிருந்து தப்பி விடுகிறார். தனது புகழ் கிடைக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரி சுராஜ் வெஞ்சரமூடு திட்டம் போட்டு தனுஷை பல வழக்குகளில் சிக்க வைக்கிறார்.

- Advertisement -

அதனால் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து தனுஷ் தப்பித்து செல்கிறார். 6 மாதங்கள் கழித்து ரேணிகுண்டாவில் திருட்டை விட்டு விட்டு மனைவி மமீதா பைஜூவுடன் ஹோட்டல் ஒன்றில் தனுஷ் வேலை செய்து வருகிறார். சொந்தமாக தொழில் தொடங்கலாம் என்று முடிவு செய்து சொந்த ஊரான இராமநாதபுரத்திற்கு தனுஷ் தனது மனைவியுடன் வருகிறார்.

அங்கு தனது தந்தை கேஎஸ் ரவிக்குமார் வைத்திருக்கும் நிலத்தை விற்று பணம் கேட்கிறார். ஆனால் நிலம் வங்கியில் அடமானத்தை இருப்பதை அறிந்து தனுஷ் அதிர்ச்சியடைகிறார். மேலும் வங்கி கடனை கட்ட முடியாமல் நிலத்தை ஜப்தி செய்ய நோட்டீஸ் வருகிறது. இந்நிலையில் கேஎஸ் ரவிக்குமாரும் இறந்து விடுகிறார். அவரது சடலத்தை வங்கி அதிகாரிகள் அடக்கம் செய்ய நிலம் கொடுக்க மறுக்கிறார்கள். நிலத்தை மீட்க வங்கியை கொள்ளையடிக்க நடிகர் தனுஷ் முடிவு செய்கிறார்.

- Advertisement -

இறுதியில் தனுஷ் வங்கியை கொள்ளை அடித்தாரா? தனது நிலத்தை மீட்டாரா? என்பதுதான் கர படத்தின் கதை. நாயகனாக நடித்துள்ள தனுஷ் அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆக்சன் காதல் தந்தை பாசம் என அனைத்திலும் தன் அழுத்தமான நடிப்பை பதிவு செய்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் மமிதா பைஜூவும் யதார்த்தமான நடிப்பை தந்திருக்கிறார். கேஎஸ் ரவிக்குமாரும் தனது அனுபவப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கிறார்.

போலீஸ் அதிகாரியாக வரும் சுராஜ் வெஞ்சரமூடு மிரட்டலான நடிப்பால் பாராட்டை பெறுகிறார். வங்கி அதிகாரியாக ஜெயராம், மாமாவாக கருணாஸ் மற்றும் பிருத்வி நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. வங்கி கொள்ளை, விவசாய நிலம் மீட்பு ஆகியவற்றை மையக்கருவாக வைத்து விக்னேஷ் ராஜா படத்தை இயக்கியிருக்கிறார். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பான திரைக்கதையில் அமைந்துள்ளது. ஜீவி பிரகாஷின் இசை ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

- Advertisement -

சற்று முன்