- Advertisement -
Homeபொழுதுபோக்குமுதல்ல இந்த அலப்பரை எல்லாம் முடியட்டும், அப்புறமா தான் அது வரும் - கருப்பு படம்...

முதல்ல இந்த அலப்பரை எல்லாம் முடியட்டும், அப்புறமா தான் அது வரும் – கருப்பு படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் தந்த இயக்குனர் ஆர்ஜே பாலாஜி!

- Advertisement -

நடிகர் மற்றும் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த படம் கருப்பு. இந்த படத்தில் திரிஷா லப்பர் பந்து சுவாசிகா ஷிவதா நட்டி நடராஜ் யோகிபாபு மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். இயக்குனர் ஆர்ஜே பாலாஜி தான் இந்த படத்தில் வில்லனாக நடித்திருப்பதாக தெரிகிறது.

கருப்பு படம் வருகிற 14ம் தேதி ரிலீஸ் என அறிவித்துள்ள நிலையில் இன்னும் கருப்பு படத்தின் டிரெய்லர் வெளியாகவில்லை. ரெட்ரோ படத்துக்கு பிறகு ஓராண்டு கழித்து வரும் கருப்பு படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் டிரெய்லரை எதிர்பார்த்து சூர்யா ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் கருப்பு படத்தின் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி காரில் அமர்ந்தபடி ஒரு வீடியோ வெளியிட்டு அப்டேட் கொடுத்துள்ளார். அந்த வீடியோவில் ஆர்ஜே பாலாஜி கூறியிருப்பதாவது, நான் இந்த மாதிரி சீட் பெல்ட் போட்டு ஏதாவது வீடியோ போட்டாலே ஏதாவது ஒரு அப்டேட்டோட வர்றேன்னு அர்த்தம்.

அடுத்த வாரம் இதே நேரம் கருப்பு படம் ரிலீஸ் பண்றதுக்கான வேலைகளை கவனிச்சிட்டு இருப்போம். படத்தின் டிரெய்லர் ரெடி. அனைவருக்கும் ட்ரெய்லர் பிடிக்கும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆனா இப்போ நிறைய அரசியல் நிகழ்வுகள் நடந்துகிட்டு இருக்கு. நாம ஆசையா ஓட்டு போட்டு ஒரு விஷயம் நடந்திருக்கு என்கிற மகிழ்ச்சியோடு இருக்கும்போது பல எதிர்பாராத திருப்பங்கள்.

- Advertisement -

இந்த திருப்பங்கள் எல்லாம் முடிஞ்சு நல்ல விஷயம், நம்ம எதிர்பார்க்கிற விஷயம் சீக்கிரமே நடக்கட்டும். அதுக்கு நம்ம எல்லாம் வேண்டிக் கொள்வோம். நல்லது நடக்கட்டும். நான் டிரெய்லரை விட்டுட்டு அப்புறம் பார்த்தா திடீர்ன்னு அரசியல் விஷயங்கள் பயங்கரமா டேக் ஓவர் பண்ண கூடாதுன்னு காத்திருக்கோம்.

சீக்கிரமே ஒரு தெளிவு பிறக்கட்டும். உங்களுக்கு பிடித்த மாதிரி படத்தை ரிலீஸ் பண்றதுக்கு பிளான் பண்ணிட்டு இருக்கோம். சீக்கிரமே அடுத்த கட்ட நடவடிக்கையோடு உங்களை சந்திக்கிறேன். கருப்பன் கூட இருக்கான். கூடவே வருவான். நம்மள செமையா பார்த்துப்பான் என்று ஆர்ஜே பாலாஜி அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்