- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த பக்கமா? அந்த பக்கமா? மதில் மேல் பூனையாக 6 எம்எல்ஏக்கள் ஆதரவு, விசி கம்யூ.,...

இந்த பக்கமா? அந்த பக்கமா? மதில் மேல் பூனையாக 6 எம்எல்ஏக்கள் ஆதரவு, விசி கம்யூ., கட்சிகள் ஆதரவுக்காக காத்திருக்கும் விஜய் – ஆனா இது நடக்குமா?

- Advertisement -

சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்கணுமே என்று கிராமப்புறங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள். அப்படிதான் இன்றைக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் நிலைமை உள்ளது. 108 தொகுதிகளில் ஜெயித்த தவெக கட்சிக்கு காங்கிரஸ் கட்சி 5 எம்எல்ஏக்கள் ஆதரவை பரிபூரணமாக தந்துவிட்டது.

ஆனால் இப்போது 6 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே தவெக ஆட்சியமைக்க முடியும். அந்த 118 எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதம் தந்தால் மட்டுமே தவெக தலைவர் விஜயை ஆட்சியமைக்க அழைக்க முடியும் என்று தமிழக கவர்னர் ( பொறுப்பு) ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உறுதியாக கூறிவிட்டார்.

- Advertisement -

இப்படிப்பட்ட ஒரு சூழலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 என மொத்தம் 6 எம்எல்ஏக்கள் ஆதரவு கிடைத்தால் தவெக கட்சி ஆட்சியமைக்க கவர்னரிடம் உரிமை கோர முடியும். ஆனால் இன்று மாலை தான் முடிவை தெரிவிக்க முடியும் என்று விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தெரிவித்துள்ளன.

அதே வேளையில் திமுக அதிமுக கட்சிகள் இணைந்து ஆட்சியமைக்க முயற்சித்தாலும் இந்த 6 எம்எல்ஏக்களின் ஆதரவு அவர்களுக்கும் தேவை. ஏனெனில் திமுக அதிமுக கூட்டணியில் இப்போது காங்கிரஸ் தவிர்த்து கூட்டணி கட்சிகள் 121 ஆக உள்ளது. அதில் இந்த 6 எம்எல்ஏக்கள் ஆதரவு மறுக்கப்பட்டால் திமுக அதிமுக கூட்டணி பலமும் 115 ஆக குறைந்து விடும்.

- Advertisement -

இப்படிப்பட்ட ஒரு சூழலில் இப்போது திமுக அதிமுக கூட்டணி ஆட்சியமைப்பதும், தவெக கட்சி ஆட்சியமைப்பதும் இந்த 6 எம்எல்ஏக்களின் ஆதரவில்தான் உள்ளது. அதாவது விசிகவும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இந்த பக்கமா, அந்த பக்கமா என எந்த பக்கம் தங்களது ஆதரவை தரப்போகிறது என்கிற முடிவை இன்று மாலை தான் அறிவிக்க உள்ளது.

ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் 2 கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த தேர்தலில் 6 எம்எல்ஏக்களை பெற்றது திமுக கூட்டணியில் இருந்துதான் போட்டியிட்டன. அப்படி இருக்கும் போது தேர்தலுக்கு முந்தைய கூட்டணிக்கு தான் அவர்கள் முக்கியத்துவம் தர அதிக வாய்ப்புள்ளது. மேலும் தவெக பக்கம் அந்த கட்சிகள் தாவினால், நிரந்தரமாக தவெக கூட்டணியில்தான் நீடிக்க முடியும் என்கிற சிக்கலும் உள்ளது. எனவே தவெக பக்கம் அவர்கள் வருவதற்கு வாய்ப்பு குறைவுதான் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்