- Advertisement -
Homeபொழுதுபோக்குஇன்று உலக அன்னையர் தினம், என் தாய் அங்கம்மாள் மறைந்த தினம் - கவிதை எழுதிய...

இன்று உலக அன்னையர் தினம், என் தாய் அங்கம்மாள் மறைந்த தினம் – கவிதை எழுதிய கவிஞர் வைரமுத்து!

- Advertisement -

இன்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பெற்ற தாய் பெருமை உணர்த்தும் விதமாக இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் பலரும் தங்களது அன்னையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வீடியோக்களை தங்களது வலைதள பக்கங்களில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஆனால் கவிஞர் வைரமுத்து வெளியிட்ட அன்னையர் தினம் குறித்த பதவில் தனது தாயார் அங்கம்மாள் குறித்து உருக்கமாக கவி பாடியிருக்கிறார். குறிப்பாக அன்னையர் தினம்தான் என் தாய் அங்கம்மாள் மறைந்த தினம் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

- Advertisement -

அன்னையர் தினத்தை முன்னிட்டு இன்று கவிஞர் வைரமுத்து தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது, மனிதன் ஒரு சுயநல உயிரி. ஏனெனில் அவன் பிறந்ததே ஆண் – பெண் சுகம் என்ற சுயநலத்தில் தான். அவனது ஒவ்வொரு மரபணுவிலும் ஒட்டியிருக்கும் சுயநலம் கடைசி மனிதன் வரை அதைக் கடத்தும் கதிர் வீச்சு உடையது.

எனவே தன்னல மறுப்புள்ள ஓர் உறவை அல்லது உயிரை அவன் வாழ்வெல்லாம்தேடிக் கொண்டே இருக்கிறான். இறுதியில் தாயென்ற ஒருபொருளில் அதைக் கண்டடைகிறான். சுயநலமே இல்லாத உறவும் அல்லது குறைந்த சுயநலமே உள்ள உறவும் தாயாக இருக்கிறாள்.

- Advertisement -

அதனால்தான் மனித குலம் கடவுளின் நாற்காலியில் தாயை அமர்த்திச் சமாதானம் அடைகிறது. இன்று அன்னையர் தினம். எனக்கு என் தாய் அங்கம்மாள் மறைந்த தினம். வடுகபட்டிக்கு வந்திருக்கிறேன் அந்த ஓராண்டு நினைவை அனுசரிக்க.

என்னை வார்த்துக்கொடுத்த தாய்த் தங்கத்தை வழிபட மே மாதத்துக் குளத்தைப் போல என் ரத்த உறவுகள் அற்றுக்கொண்டோ வற்றிக்கொண்டோ உள்ளன. தாயை முன்வைத்து மிச்சமிருக்கும் உறவுகளை உச்சிமேல் போற்றுகிறேன். உலக அன்னையர்க்கெல்லாம் என் தலை வணக்கம் என்று அந்த பதிவில் கவிஞர் வைரமுத்து கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்