ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த கருப்பு படம் வருகிற 14ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் கருப்பு படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி உள்ளது. தமிழக அரசியல் பரபரப்பு காரணமாக கடந்த ஒரு வாரமாக டிரெய்லர் வெளியீடு தாமதமான நிலையில் இன்று விஜய் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு கருப்பு டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த படத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்துள்ளார். திரிஷா நாயகியாக நடித்துள்ளார். மேலும் சுவாசிகா நட்டி நடராஜ் இந்திரன்ஸ் யோகிபாபு சுப்ரீத் ரெட்டி அனகா மாயா ரவி உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
இன்று வெளியான இந்த கருப்பு பட டிரெய்லரில் நடிகர் சூர்யா மாஸ் காட்டியிருக்கிறார். ஆனால் படத்தில் வரும் காட்சிகளை வைத்து பார்க்கும் போதே படத்தின் கதையை ஓரளவு ரசிகர்கள் யூகிக்க முடிகிறது. இந்திரன்ஸ் ஒரு வழக்கோடு வருகிறார். அந்த வழக்குக்கு எதிராக வக்கீல் ஆர்ஜே பாலாஜி
செயல்படுகிறார்.
இப்படிப்பட்ட சூழலில் கருப்பு சாமியான சூர்யா வக்கீலாக வந்து அந்த வழக்குகாக வாதாடி ஜெயிக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதையாக தெரிகிறது. மேலும் இதில் நீதிபதியாக நட்டி நடராஜ் வக்கீலாக சூர்யா மரியம் ஜார்ஜ் திரிஷா ஆர்ஜே பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
மலையாள சினிமாவில் இருந்து நிறைய நடிகர்கள் தமிழுக்கு வந்துள்ளனர். ஜெயராம் மோகன்லால் சுரேஷ்கோபி மம்முட்டி சமீபமாக சுராஜ் வெஞ்சரமூடு அந்த வரிசையில் இந்த படத்தில் மலையாளத்தில் அதிக கவனம் பெற்ற நடிகர் இந்திரன்ஸ் முக்கிய கேரக்டரில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கருப்பு படத்தில் சூர்யா வரும் பக்தி பரவசம் நிறைந்த காட்சிகளும் டிரெய்லரில் இடம்பெற்றுள்ளன. அதே நேரத்தில் ஒரு வழக்தை மையப்படுத்திய கதைதான் இது என்றாலும் அதை கதை திரைக்கதையாக சொன்ன விதத்தில் ஆர்ஜே பாலாஜி ஜெயித்திருந்தால் படமும் பட்டைய கிளப்பும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் சூர்யாவுக்கு ஒரு சூப்பர் கம்பேக் படமாக கருப்பு அமைய வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.





