காற்று எப்போது எந்த பக்கம் வீசும் என்பதை யாராலும் சொல்ல முடியாது. சிலருக்கு அதிர்ஷ்டம் என்பது எந்த ரூபத்திலும் வரலாம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை நான் எம்எல்ஏ, நான் அமைச்சர் என்று நினைத்துக் கூட பார்க்காத பலர் இன்று எம்எல்ஏவாக அமைச்சராக தமிழ்நாட்டில் வலம் வருகின்றனர்.
நடிகர் விஜய் துவங்கிய தவெக கட்சியில் தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்று அதில் பலர் அமைச்சர்களாகவும் இன்று பதவியேற்றுக் கொண்டனர். தமிழக முதல்வர் விஜய் தலைமையில் இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில் தூத்துக்குடி எம்எல்ஏ நடிகர் ஸ்ரீநாத் இன்று மீன்வளத்துறை அமைச்சராக உள்ளார்.
முதல்வர் விஜய் அமைச்சரவையில் உள்ள பெரும்பாலானவர்கள் மக்களுக்கு பரிச்சயம் இல்லாதவர்கள். எம்எல்ஏக்கள் பெரும்பாலும் புதிய அறிமுக முகங்கள்தான். எதிர்பார்க்காத நிலையில் பலரும் எம்எல்ஏ அமைச்சராக இன்று தவெக ஆட்சியில் களத்தில் உள்ளனர். இப்படி எம்எல்ஏ அல்லது அமைச்சராகும் ஒரு அரிய வாய்ப்பை இழந்து விட்டோமே என்று காமெடி நடிகர் பாலாஜி அழாத குறையாத புலம்பிக்கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜயுடன் பல படங்களில் நடித்தவர் தாடி பாலாஜி. காமெடி நடிகர். தவெக கட்சி ஆரம்பித்த போது விக்கிரவாண்டி மாநாட்டில் கலந்துக் கொண்டார். மேடையிலேயே விஜய் அவரை கட்டிப் பிடித்தார். மேலும் விஜயின் உருவத்தை நெஞ்சில் டாட்டூஸ் வரைந்து, என் நெஞ்சில் குடியிருக்கும் என்று எழுதி தாடி பாலாஜி விஜய் மீதான தனது அன்பை நட்பை வெளிப்படுத்தினார்.
ஆனால் ஒரு கட்டத்தில் தவெக பொதுச்செயலாளர் புஸ்லி ஆனந்த் மீது புகார் கூறிய தாடி பாலாஜி, தலைவர் விஜயை பார்க்கவே விடாமல் அவர் தடுக்கிறார். என்னை போன்ற மக்களுடன் அதிக தொடர்புள்ள கலைஞர்களை் விஜயிடம் நெருங்கி பழகினால்தான் மக்களின் உணர்வுகளை அவரிடம் சொல்ல முடியும் என்று கூறினார். அதன்பிறகு தவெக கட்சியில் இருந்தும் விலகி விட்டார்.
ஒருவேளை தாடி பாலாஜி தவெக கட்சியில் அமைதியாக இருந்திருந்தால் யார் யாருக்கோ எம்எல்ஏ வாய்ப்பு கொடுத்த விஜய், தன்னுடன் பல படங்களில் நடித்தவர் நண்பர் என்ற முறையில் நிச்சயமாக தாடி பாலாஜிக்கும் ஒரு தொகுதியை கொடுத்திருப்பார். அதில் வெற்றி பெற்று தாடி பாலாஜி எம்எல்ஏ ஆகியிருந்தால், ஒருவேளை அமைச்சராக கூட அவர் வந்திருக்க வாய்ப்புள்ளது. இப்போது இப்படி கோட்டை விட்டுவிட்டோமே என்று தாடி பாலாஜி புலம்புகிறார் என்று தெரிய வந்துள்ளது.





