நடிகர் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த வேட்டையன் கூலி போன்ற படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வரவேற்பை பெறவில்லை. கெஸ்ட் ரோலில் ரஜினிகாந்த் நடித்த லால் சலாம் படமும் மோசமான தோல்வியை தழுவியது. குறிப்பாக கூலி படம் வணிக ரீதியாக வெற்றி என்றாலும் விமர்சன ரீதியாக இது காட்டு மொக்கை படம்தான் என்று விமர்சகர்கள் கூறினர்.
கடந்த 2023ம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற படம் ஜெயிலர். நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் ரம்யாகிருஷ்ணன் வசந்த் ரவி மிர்ணாள் மேனன் விநயாயகன் மற்றும் கெஸ்ட் ரோலிஸ் மோகன்லால் சிவராஜ்குமார் ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். தமன்னாவும் காவலய்யா பாட்டுக்கு குத்தாட்டம் போட்டு அசத்தியிருந்தார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான ஜெயிலர் படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியது. அப்போதே இந்த படத்தின் 2ம் பாகம் உருவாக வேண்டும் என்று படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் முடிவெடுத்த நிலையில் இப்போது ஜெயிலர் 2ம் பாகம் தயாராகி ரிலீஸ்க்கு நாள் குறிக்கப்பட்டு விட்டது.
இதை விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கவும் உள்ளனர்.
வருகிற செப்டம்பர் மாதம் 3ம் தேதி ஜெயிலர் 2 பான்இந்தியா படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதற்காக ஐ மேக்ஸ் தியேட்டர் நிர்வாகங்களுடன் ஒப்பந்தம் போட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம், 2 வாரங்களுக்கு வேறு படங்களை திரையிட 2 வாரங்களுக்கு அனுமதியில்லை என்றும் ஒப்பந்தம் செய்துள்ளது. அதனால் ஜெயிலர் 2 படம் செப்டம்பர் 3ம் தேதி ரிலீஸ் என்பது 100 சதவீதம் உறுதியாகி விட்டது.
ஜெயிலர் படம் வெளியான போது இது தங்கப்பதக்கம் படத்தின் லேட்டஸ்ட் வெர்சன்தான். போலீஸ் அதிகாரியான சிவாஜி சமூக விரோதியான தனது மகனை கிளைமாக்ஸில் சுட்டுக்கொல்வார். அதே கதையை தான் நெல்சன் ஜெயிலர் படமாக எடுத்து வைத்திருக்கிறார் என்றும் ஒரு தரப்பினர் கிண்டலடித்தனர். எனினும் படம் அந்த விமர்சனங்களையும் கடந்து பெரிய வெற்றியை பெற்றது.
இதுவரை ரஜினி நடித்த எந்த படமும் 2ம் பாகமாக வெளிவந்தது இல்லை. அப்படியே வந்தாலும் அது வேறு நடிகர்கள்தான் நடித்திருக்கின்றனர். ஜெயிலர் 2 படம்தான் ரஜினி நடிக்கும் முதல் 2ம் பாகம் படமாக உள்ளது. மேலும் தமிழ் சினிமாவில் இந்த படம்தான் 1000 கோடி ரூபாய் வசூலிக்கும் சாதனை படமாகவும் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.





