- Advertisement -
Homeபொழுதுபோக்குவிரைவில் போரடித்து விடும், பொம்மையை தூக்கி வீசி விடுவார்கள், இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நிச்சயம்...

விரைவில் போரடித்து விடும், பொம்மையை தூக்கி வீசி விடுவார்கள், இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நிச்சயம் தொடராது – விஜய் அரசு குறித்து விமர்சித்த முன்னாள் முதல்வர் ஸ்டாலின்!

- Advertisement -

கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்தை திமுக ஆட்சி செய்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தலில் 107 இடங்களில் வெற்றி பெற்ற நடிகர் விஜயின் தவெக கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது. தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றுள்ளார். திமுக கூட்டணியில் இருந்து வெற்றி பெற்று ஆதரவு தந்த கட்சிகளுக்கும் அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது. இதில் பல வேறுபட்ட கருத்துகளும் மக்கள் மத்தியில் இருந்து வருகின்றன.

தமிழக சட்டசபை தேர்தலில் கொளத்தூரில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தோல்வியடைந்த நிலையில் சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலின் சட்டசபை எதிர்கட்சி தலைவராக உள்ளார். கட்சியின் தோல்விக்கான காரணம் குறித்து உயர்மட்ட விசாரணைக்குழு அமைத்து கட்சியின் தலைவர் ஸ்டாலின் விசாரணை அறிக்கை தர உத்தரவிட்டுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் சென்னையில் நேற்று நடந்த திமுக இளைஞரணி கூட்டத்தில் திமுக தலைவர் மற்றும் முன்னாள் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, குழந்தைகள் பொம்மை மீது ஆசைப்பட்டு பெற்றோரிடம் அழுது ஆர்ப்பாட்டம் செய்து அதை வாங்கிக் கொள்ளும். அந்த பொம்மையை 2 நாட்கள் வைத்து ஆசையாக விளையாடும். பிறகு போரடித்து விட்டால் அந்த பொம்மையை தூக்கி வீசி விடும்.

அதுபோல் தான் சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் சினிமா கவர்ச்சியால் ஒரு நடிகருக்கு மக்கள் தேர்தலில் வாக்களித்து வெற்றி பெறச் செய்தார்கள். கொஞ்ச நாட்களில் அந்த சினிமா கவர்ச்சி போய்விட்டால் அந்த நடிகரை மக்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். தாயை தேடி வரும் பிள்ளைகளை போல திமுகவை தான் அவர்கள் மீண்டும் தேடி வருவார்கள்.

- Advertisement -

இப்போதும் பெரும்பான்மையாக மக்கள் அந்த நடிகர் கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யவில்லை. 107 இடங்களில் தான் அந்த கட்சி ஜெயித்தது. நமது கூட்டணி கட்சிகளில் தயவால் அந்த ஆட்சி நடந்துக்கொண்டிருக்கிறது. சிபிஐ 2 சிபிஎம் 2 விசிக 2 இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 2 அந்த கட்சி 5 என மொத்தம் 120 என்ற நிலையில் மதில் மேல் பூனையாக தான் அந்த நடிகர் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. இதில் அவர்களுக்கு அமைச்சர் பதவிகளும் தரப்பட்டுள்ளது. வாழ்த்துகள்.

கூட்டணி கட்சிகளின் ஆதரவில்தான் இந்த நடிகர் ஆட்சி நடந்து வருகிறது. தமிழகத்தில் இந்த நடிகர் ஆட்சி 5 ஆண்டுகளுக்கு நிச்சயமாக இருக்காது என்று மட்டும் நிச்சயமாக உறுதியாக கூறுகின்றனர். எந்த நேரத்திலும் இந்த சூழ்நிலை மாறலாம். அதனால் திமுகவினர் நம்பிக்கையுடன் இருங்கள். கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் பல நல்ல திட்டங்களை மக்களுக்கு செய்திருக்கிறோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்