மும்பையில் இருந்து தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர் நடிகை ஜோதிகா. நடிகை நக்மாவின் தங்கை என்ற அடையாளத்துடன் நடிக்க வந்தாலும் நல்ல நடிப்புத்திறமை நடனத்திறமை என வெளிப்படுத்தி தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்தார். அவர் நடித்த ஆரம்ப கால படங்களே அவருக்கு நல்ல அடையாளத்தை பெற்றுத் தந்தது.
பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து முதல் படத்தில் அறிமுகமானார். ஆனால் இவர் 2வது நடித்த வாலி படம்தான் முதலில் ரிலீஸானது. தொடர்ந்து கமல் விஜய் அஜீத்குமார் சூர்யா சியான் விக்ரம் மாதவன் என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து நட்சத்திர நடிகையாக மாறினார்.
குறிப்பாக சந்திரமுகி படத்தில் கங்கா கேரக்டரில் ஜோதிகாவின் நடிப்பு பெரிய அளவில் பாராட்டை பெற்றது. நடிகர் சூர்யாவுடன் காக்க காக்க பேரழகன் சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட படங்களில் நடித்த ஜோதிகா இருவரும் காதல் திருமணம் செய்துக்கொண்டனர். திருமணத்துக்கு பிறகு சில ஆண்டுகள் இடைவெளியில் மீண்டும் ஜோதிகா நடிக்க வந்துவிட்டார்.
இப்போது சூர்யா ஜோதிகா மும்பையில் செட்டிலாகி விட்ட நிலையில் நடிகை ஜோதிகா இந்தி படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டுகிறார். தமிழில் நடிக்க அவர் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் தமிழில் ஜோதிகாவுக்கு இன்னும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. ஆனால் தமிழ் படங்களில் நடிக்காமல் ஜோதிகா இருக்கிறார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் இதுகுறித்து பேசிய நடிகை ஜோதிகா கூறியதாவது, நான் தமிழில் அரசு பள்ளி ஆசிரியர் வக்கீல் கலெக்டர் போலீஸ் அதிகாரி என எல்லாவிதமான கதாபாத்திரத்தையும் பண்ணிவிட்டேன். இல்லத்தரசியாக பலவிதமான கேரக்டர்களையும் நடித்துவிட்டேன். திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான கேரக்டரில் நடிக்க நான் விரும்பவில்லை.
வித்தியாசமான கதாபாத்திரத்திற்காக காத்துகிட்டு இருக்கேன். இரண்டு வருஷம் அல்ல இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் பரவாயில்லை. அப்படி ஒரு கதாபாத்திரத்துக்காக நான் காத்திருப்பேன் என்று நடிகை ஜோதிகா கூறியிருக்கிறார். தமிழில் நாயகியாக நடித்துதான் ஜோதிகா பெரிய நட்சத்திர நாயகியாக மாறினார். இப்போது நல்ல கேரக்டர் கிடைப்பதில்லை என்று சொல்லி தமிழை புறக்கணிக்கிறார் என்று ரசிகர்கள் விமர்சிக்கின்றனர்.





