நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 172வது படம் ஜெயிலர் 2. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ளார். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். 2023ம் ஆண்டில் வெளியான ஜெயிலர் படம் மாஸ் ஹிட் ஆனதால் அதன் தொடர்ச்சியாக ஜெயிலர் 2 படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகி உள்ளது.
இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன் மிருணாள் மேனன் யோகிபாபு மோகன்லால் சிவராஜ்குமார் பவன் கல்யாண் பாலய்யா எஸ்ஜே சூர்யா மற்றும் விஜய் சேதுபதி நடித்திருக்கின்றனர். ஜெயிலர் படத்தின் 2ம் பாகமாக இந்த படம் உருவாகி உள்ளது.
கடந்த ஓராண்டுக்கு மேலாக படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் வருகிற ஆகஸ்ட் 13ம் தேதி ஜெயிலர் 2 படத்தை ரிலீஸ் செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்பாடுகளை செய்து வந்தது. ஆனால் இப்போது அந்த தேதியில் ஜெயிலர் 2 ரிலீஸ் ஆகாது என்பது தெரிய வந்துள்ளது.
இதற்கு படத்தின் இயக்குனர் நெல்சன்தான் காரணம் என்றும் கூறப்படுகிறது. படப்பிடிப்பு முடிவடைந்தாலும் இன்னும் போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகள் நிறைய உள்ளது. அதை முடிக்க இன்னும் சில மாதங்கள் கால அவகாசம் தேவைப்படுவதால் வரும் ஆகஸ்ட் 13ம் தேதி ரிலீஸ் செய்ய வாய்ப்பில்லை என்று அவர் மறுத்திருக்கிறார்.
அதனால் வருகிற செப்டம்பர் மாதம் 4ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி அன்று ஜெயிலர் 2 படத்தை ரிலீஸ் செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ரஜினி படம் ரிலீஸ் காரணமாக ஆகஸ்ட் மாதத்தில் ரிலீஸ் என திட்டமிட்டு ஒத்தி வைக்கப்பட்ட சூர்யா நடித்த விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் படம் அந்த நாளில் ஆகஸ்ட் 13ம் தேதி ரிலீஸ் என்று தெரிய வந்துள்ளது.
அதே போல் நடிகர் சூரி நடித்த மண்டாடி படமும் வருகிற ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி அன்று ரிலீஸ் செய்ய முடிவாகி உள்ளது. நடிகர் சூரி நாயகனாக நடித்த படங்களில் மண்டாடி படம்தான் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான முதல் படம் என்பதும் இந்த படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் ரூ. 25 கோடி விலைக்கு உரிமம் வாங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஜெயிலர் 2 ரிலீஸ் செப்டம்பர் மாதம் 4ம் தேதிக்கு தள்ளிப் போனதால் ஆகஸ்ட் 13ம் தேதி சூர்யா சூரி நடித்த படங்கள் ரிலீஸாகின்றன,





