- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழக முதல்வர் விஜயை நேரில் சந்தித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - லியோ 2 படத்துக்கு...

தமிழக முதல்வர் விஜயை நேரில் சந்தித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் – லியோ 2 படத்துக்கு ஓகே வாங்கிடுங்கணா என்று கோரிக்கை விடுத்த தளபதி ரசிகர்கள்!

- Advertisement -

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து தமிழ் திரையுலகம் சார்ந்த சங்கங்களின் நிர்வாகிகள் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் நடிகர்கள் நடிகைகள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். சினிமா துறை சார்ந்த பல்வேறு கோரிக்கைகளையும் மனுவாக முதல்வர் விஜயிடம் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முதல்வர் விஜய் பிறப்பித்த உத்தரவு ஒன்றில், இனி புதிய படங்கள் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் போது தொடர்ந்து 7 நாட்களுக்கு அந்த படங்களை தினமும் 5 காட்சிகள் என திரையிட்டு கொள்ளலாம். பண்டிகை நாட்கள் உள்ளூர் விடுமுறை தினங்கள் சனி ஞாயிறு தினங்களிலும் 5 காட்சிகள் திரையிட்டு கொள்ளலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டு தியேட்டர் உரிமையாளர்களை சந்தோஷப்படுத்தி உள்ளார்.

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் மற்றும் லியோ படங்களை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். லியோ பட விழாவில் விஜய் பங்கேற்ற போது, மேடையில் ஒருவேளை நீங்கள் தமிழக முதல்வர் ஆனால் லோகேஷ் கனகராஜூக்கு என்ன அமைச்சர்பதவியில் என்ன துறை கொடுப்பீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு விஜய், அவருக்கு நான் போதைப் பொருள் ஒழிப்பு துறையை கொடுப்பேன் என்று கூறியிருந்தார். ஆனால் கடந்த சட்டசபை தேர்தலில் லோகேஷ் கனகராஜ் ஓட்டுப் போடவில்லை. கடைசி நேரத்தில் விமான நிலையில் அவர் தடுக்கப்பட்டதால் சொந்த ஊரான கோவை கிணத்துக்கடவுக்கு அவரால் செல்ல முடியவில்லை.

- Advertisement -

லியோ படம் விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பை பெறவில்லை என்றாலும் வணிக ரீதியாக அது பெரிய வெற்றிப் படமாகவே இருந்தது. இப்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் டிசி என்ற படத்தில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு நடிகர் அல்லு அர்ஜூன் நடிக்கும் ஒரு படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார்.

இந்நிலையில் இன்று தமிழக முதல்வர் விஜயை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நேரில் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்தார். விஜயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்துகளை கூறியிருக்கிறார். அப்படியே லியோ 2 படம் குறித்து பேசி ஓகே வாங்கிடுங்க அண்ணா என்று தளபதி ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்