- Advertisement -
Homeபொழுதுபோக்குசினிமாவில் ஒரே ஒரு குஷ்புதான், அவர் குஷ்புவாக முடியாது - தன் அம்மா குறித்து ஓபனாக...

சினிமாவில் ஒரே ஒரு குஷ்புதான், அவர் குஷ்புவாக முடியாது – தன் அம்மா குறித்து ஓபனாக பேசிய அவந்திகா!

- Advertisement -

நடிகை குஷ்புவின் குடும்ப நிறுவனம் அவ்னி மூவிஸ் தயாரிப்பில் டபுள் ஆக்குபன்சி என்ற படம் உருவாகிறது. இந்த படத்தை அஸ்வின் கந்தசாமி இயக்குகிறார். சந்தோஷ் ரேஷ்மா சம்யுக்தா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு கிரியேட்டிவ் தயாரிப்பாளராக குஷ்புவின் இளைய மகள் அனந்திகா பணியாற்றி வருகிறார். அவரது பள்ளி நண்பர் தான் படத்தின் நாயகன் சந்தோஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் நடந்த இந்த படத்தின் விழாவில் நடிகை குஷ்பு பேசியதாவது, மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் அனந்திகா ஒர்க் பண்ணினார். ஆனால் திரையில் அவர் பெயர் வரவில்லை. அது அவர் செய்த தவறுதான். பின்னர் லண்டனுக்கு படிக்கச் சென்றார். இப்போது சினிமாவுக்குள் வந்து இருக்கிறார்.

- Advertisement -

சின்ன வயதிலிருந்து ஹீரோ சந்தோஷை எங்களுக்கு தெரியும். அவர் என் மகன் மாதிரி. இன்றைக்கும் குழந்தைகள் பெரிய ஆளாகி விட்டாலும் காலையில் எங்கே இருந்தாலும் எனக்கு அம்மா என போன் செய்து உதவிகள் கேட்பார்கள். ஏன் இப்பவும் வெளியூரில் இருந்தால் கூட சுந்தர் சி யை நான்தான் எழுப்பி விடுகிறேன். நான் என் மகள்களுக்கு அட்வைஸ் செய்வதில்லை.

இப்போது தமிழில் நான் படங்களில் நடிப்பதில்லை. ஆனால் தெலுங்கில் சில படங்களில் நடிக்கிறேன். என் மகள் அனந்திகா காதல் திருமணம் செய்வாரா என்று தெரியவில்லை. முதலில் அவரது உயரத்திற்கு மாப்பிள்ளை கிடைக்க வேண்டும். இந்த படம் தவிர மீசையை முறுக்கு 2 படத்தையும் அவர் முடித்து விட்டார். பெரிய மகள் தமிழில் 2 படங்களில் நடிக்கப் போகிறார். நான் செக்கில் கையெழுத்து போட்டுக் கொண்டே பிஸியாக இருக்கிறேன் என்று நடிகை குஷ்பு பேசினார்.

- Advertisement -

இந்த விழாவில் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அனந்திகா பேசியதாவது, அப்பா அம்மா ஏகப்பட்ட படங்கள் ஹிட் கொடுத்து இருக்கிறார்கள். அவர்கள் நடித்த படங்களில் முறைமாமன் படத்தை நான் ரீமேக் செய்ய ஆசைப்படுகிறேன். அந்த படத்தின் மூலம் தான் அப்பாவும் அம்மாவும் காதலில் இணைந்தார்கள்.

அதேபோல் அப்பா இயக்கிய படங்களில் உள்ளத்தை அள்ளித்தா எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அந்த மாதிரி படத்தை ரீமேக் செய்ய முடியாது. இப்போது அக்கா அவந்திகா சினிமாவின் நடித்து வருகிறார். ஆனாலும் அவர் குஷ்பு ஆக முடியாது. சினிமாவில் ஒரே ஒரு குஷ்பு தான் என்று குஷ்புவின் இளைய மகள் அவந்திகா அந்த நிகழ்ச்சியில் பேசினார்.

- Advertisement -

சற்று முன்