- Advertisement -
Homeபொழுதுபோக்கு42 வயதிலும் குறையாத இளமை, வெளிப்படாத முதுமை - உடம்பு பிட்னஸ் குறித்து பெண்களுக்கு அட்வைஸ்...

42 வயதிலும் குறையாத இளமை, வெளிப்படாத முதுமை – உடம்பு பிட்னஸ் குறித்து பெண்களுக்கு அட்வைஸ் செய்த நடிகை அபிராமி!

- Advertisement -

தமிழ் சினிமாவில் வானவில் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அபிராமி. மலையாள சினிமாவில் இருந்து தமிழில் அவர் அறிமுகமானார். இந்த படத்தில் நடிகர் அர்ஜூனுக்கு ஜோடியாக அபிராமி நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து தமிழில் மிடில் கிளாஸ் மாதவன் சமுத்திரம் விருமாண்டி சார்லி சாப்ளின் மகாராஜா தக்லைஃப் மாறா உள்ளிட்ட பல படங்களில் நடிகை அபிராமி நடித்திருந்தார். இதில் நடிகர் கமலுக்கு ஜோடியாக விருமாண்டி படத்தில் அன்னலட்சுமியாக அபிராமி வாழ்ந்திருந்தார். விருமாண்டி 2 படம் உருவானால் அதில் மீண்டும் அபிராமி நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

- Advertisement -

தமிழ் சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற அபிராமி இதுவரை அவர் நடித்த படங்களை விட தற்போது அவர் நடித்திருக்கும் பிளாஸ்ட் என்ற படத்தில் ஒல்லியான தோற்றத்தில் காணப்படுகிறார். இது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. அபிராமிக்கு 42 வயதாகும் நிலையில் உடல் தோற்றத்தை இவ்வளவு கட்டுக்கோப்பாக பிட்னஸ் ஆக வைத்திருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பிளாஸ்ட் படத்தில் நடிகர் அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்துள்ள அபிராமி தனது பிட்னஸ் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கிறார். அதுகுறித்து அபிராமி கூறியதாவது, இளம் வயதில் நாம் நம் உடலை கவனித்துக் கொண்டால் தான் வயதான பின்னர் நம் உடல் நம்மை ஆரோக்கியமாக கவனித்துக் கொள்ளும். நிறைய பணம் பங்களா கார் நண்பர்கள் உறவினர்கள் என வசதியாக எதை வேண்டுமானாலும் ஒருவர் வைத்திருக்கலாம்.

- Advertisement -

ஆனால் அதை வைத்து உடல் ஆரோக்கியத்தை விலைக்கு வாங்க முடியாது. 40 வயதை கடக்கும்போது பெண்களுக்கு உடலில் கால்சியம் இழப்பு ஏற்படும். அப்போது தசை வலிமையின் தேவை அதிகமாகும். இந்த வயதில் தான் மெனோபாஸூக்கு முந்தைய மற்றும் பிந்தைய காலகட்டமும் வரும். அதனால் உடலில் பல்வேறு ஹார்மோன் மாற்றங்களும் ஏற்படக்கூடும்.

இதையெல்லாம் ஆரோக்கியமாக ஒரு பெண் எதிர் கொள்ள வேண்டும் என்றால் 35 வயதை கடந்த போதே பெண்கள் அனைவரும் தங்கள் நலனில் மிகவும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று நடிகை அபிராமி கூறியிருக்கிறார். சைவப் பிரியரான அபிராமி எடை குறைத்தது முழுக்க முழுக்க ஜிம் மட்டும் ஒர்க் அவுட் மூலமாக தான் என்றும் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்