- Advertisement -
Homeபொழுதுபோக்குஅரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக… கடைசியில் சுதா கொங்கராவை அழைத்த நடிகர் சூர்யா -...

அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக… கடைசியில் சுதா கொங்கராவை அழைத்த நடிகர் சூர்யா – வாய்ப்பில்ல ராஜா என்ற பதிலடி தந்த இயக்குனர்!

- Advertisement -

இறுதிச்சுற்று, சூரரைப் போற்று ஆகிய மாஸ் ஹிட் படங்களை தொடர்ந்து இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா புறநானூறு என்ற படத்தில் நடிக்க கடந்த 2023ம் ஆண்டில் கமிட் ஆனார். மதுரையில் சில வாரங்கள் ஷூட்டிங்கும் நடந்தது. நடிகர் சூர்யாவும் கலந்துக்கொண்டார்.

ஆனால் இந்தி திணிப்பு எதிர்ப்பை கதைக்களமாக கொண்டு, உண்மையில் நடந்த சில சம்பவங்களை மையப்படுத்தி இந்த படத்தை சுதா கொங்கரா உருவாக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் நடிகர் சூர்யா, கதையில் சில மாற்றங்கள், திருத்தங்களை சொல்லி படத்தையின் மையக்கருத்தையே மாற்ற முயற்சித்தார். அதனால் சுதா கொங்கராவுக்கும், சூர்யாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அந்த படமே நின்று போனது.

- Advertisement -

சுதா கொங்கரா படத்தில் நடித்த அந்த வேளையில்தான். இந்தியில் கர்ணா என்ற பெரிய பட்ஜெட் படத்தில் நடிக்க சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது இந்தி எதிர்ப்பை மையப்படுத்திய புறநானூறு படத்தில் நடிக்க வேண்டாம் என்ற கருத்தை சூர்யாவின் மனைவி ஜோதிகாவும், தம்பி கார்த்தியும் வலியுறுத்தியதால்தான் சூர்யா புறநானூறு படத்தில் இருந்தே விலகினார்.

ஏனெனில் பாலிவுட்டில் கர்ணா போன்ற படத்தில் நடித்துவிட்டால் அந்த படம் பெரிய ஹிட் ஆகிவிட்டால் இந்திய அளவில் பெரிய ஸ்டார் ஆகி விடலாம். அந்த நேரத்தில் சுதா கொங்கரா இயக்கும் இந்தி எதிர்ப்பு படமான புறநானூறு படத்தில் நடித்து அந்த படம் வெளியானால், கர்ணா படம் பெரிய பாதிப்பை சந்திக்கும், இந்தியில் சூர்யாவுக்கு பெரிய வாய்ப்பும் கிடைக்காது என்ற கருத்தை ஜோதிகாவும், கார்த்தியும் வலியுறுத்தி உள்ளனர்.

- Advertisement -

அதனால் மனைவி ஜோதிகா, தம்பி கார்த்தி பேச்சை நம்பி இந்தியில் உருவாகும் கர்ணா படத்துக்காக தமிழில் புறநானூறு படத்தை சூர்யா கைவிட்டார். ஆனால் இப்போது கங்குவா படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்ததால், சுதாரிக்கொண்ட பாலிவுட் படக்குழுவினர், கர்ணா படத்தையே டிராப் செய்தவிட்டனர். அதனால் அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக, இந்தி படத்தை நம்பி தமிழ் படத்தை இழந்துவிட்ட நிலை சூர்யாவுக்கு ஏற்பட்டது.

இதையடுத்து சமீபத்தில், இயக்குனர் சுதா கொங்கராவுக்கு அழைப்பு விடுத்த நடிகர் சூர்யா, புறநானூறு படத்தை உங்கள் விருப்பபடியே எடுக்கலாம், மீண்டும் நானே நடிக்கிறேன் என்று கூறியிருக்கிறார். ஏற்கனவே பட்ட அவமானங்களை மனதில் வைத்துள்ள சுதா கொங்கரா, இல்லை அதற்கு வாய்ப்பில்லை. அந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க ப்ரீ புரடக்சன்ஸ் ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றன. அதில் இனி மாற்றங்கள் செய்ய முடியாது, என்று கட் அண்ட் ரைட்டாக நோ சொல்லியிருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்