- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் அஜீத்குமார் வீட்டில் ஏற்பட்ட திடீர் சோகம் - அவரது அம்மா மோகினி காலமானார், வேதனையில்...

நடிகர் அஜீத்குமார் வீட்டில் ஏற்பட்ட திடீர் சோகம் – அவரது அம்மா மோகினி காலமானார், வேதனையில் தமிழ் சினிமா ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகர்களில் ஒருவர் அஜீத்குமார். அவரது தந்தை சுப்பிரமணியம். தாயார் மோகினி மணி. சுப்பிரமணியம் சில ஆண்டுகளுக்கு முன்பு முதுமை காரணமாக இறந்தார். 85 வயதான நிலையில் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். அவருக்கு பல்வேறு மருத்துவ சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வந்தன.

கடந்த 2021ம் ஆண்டில் துணிவு படத்தில் அஜீத்குமார் நடித்து வெளியானது. அந்த நேரத்தில் அஜீத்குமாரின் தந்தை சுப்பிரமணியம் மறைவு ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை தந்தது. அதன் பிறகு பல மாதங்கள் கழித்து தான் நடிகர் அஜீத்குமார் விடா முயற்சி படப்பிடிப்பில் கலந்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு அஜீத் குமார் தன்னுடைய தாய் மோகினி மணியை மிகவும் கவனமாக பார்த்துக் கொண்டார். நடிகர் அஜீத்குமார் தனது வீட்டில் தன்னுடைய தாய் தந்தைக்கு ஒரு தளமும் தங்களுக்கு ஒரு தளமும் ஷாலினியின் தாய் தந்தைக்கு ஒரு தளமும் தன்னுடைய சகோதரருக்கு ஒரு தளமும் என ஒரே வீட்டில் அஜீத்குமார் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் 4 வருடங்களுக்கு முன்பு அஜீத்குமாரின் தந்தை சுப்பிரமணியம் மறைந்த நிலையில் இப்போது அவரது தாயார் மோகினி மணியை இழந்து இருக்கிறார். அஜீத்குமாரின் தாயார் மோகினி மணி வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் இன்று காலை இறந்தார். அவருக்கு வயது 85. அவரது இறுதி சடங்கு பாலவாக்கத்தில் இருக்கும் அஜீத்குமாரின் வீட்டில் இன்று நடக்கிறது.

- Advertisement -

தனது குடும்பத்தில் மூத்தவரான தனது தந்தையை இழந்த சில ஆண்டுகளிலேயே தனது அன்பான தாயையும் நடிகர் அஜீத்குமார் இழந்து இருக்கிறார். அவரது குடும்ப வாழ்க்கையில் இப்படி ஒரு இழப்பு ஏற்பட்டு இருப்பது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நடிகர் அஜீத்குமாருக்கு திரைபிரபலங்கள் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

அஜீத்குமாரின் தந்தை சுப்ரமணியம் இறந்த போது நடிகராக இருந்த விஜய் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி அஜீத்குமாருக்கு ஆறுதல் கூறிவிட்டுச் சென்றார். இப்போது அவர் தமிழக முதல்வராக இருக்கிறார். தனது நண்பர் அஜீத் குமாரின் தாய் மறைவுக்கு இன்று விஜய் நேரில் வந்து அஞ்சலி செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்